Drone வாங்க ரூ.5 லட்சம் மானியம் – யார் பெறலாம்? யாருக்கெல்லாம் கிடைக்கும்?

Published : Jul 17, 2025, 12:06 PM IST

விவசாயத்தில் நவீன தொழில்நுட்பங்களை் சேர்க்கும் நோக்கில், மத்திய அரசு ட்ரோன் தொழில்நுட்பத்தை ஊக்குவிக்கும் ‘கிசான் ட்ரோன்’ திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. உரம், பூச்சிக்கொல்லி மருந்துகளை தெளிக்க ட்ரோன்களை பயன்படுத்துவதால் நேரம் செலவு மிச்சமாகிறது.

PREV
15
எல்லா இடத்திலும் ட்ரோன் மயம்

சிறிய நிகழ்ச்சி முதல் திருமணம், கட்சிக்கூட்டங்கள் என எல்லா இடங்களிலும் ட்ரோன்களை பார்க்க முடிகிறது. அவை வீடியோ எடுப்பதற்காக பறக்க விடப்படும் ட்ரோன்கள். இந்த நிலையில், விவசாயத்தில் நவீன தொழில்நுட்பங்களைச் சேர்க்கும் நோக்கில், மத்திய அரசு தற்போது ட்ரோன் தொழில்நுட்பத்தை ஊக்குவிக்கும் திட்டங்களை மேற்கொண்டு வருகிறது. குறிப்பாக, உரம் மற்றும் பூச்சிக்கொல்லி மருந்துகளை வயலில் தெளிக்க ட்ரோன் பயன்படுத்துவதால் நேரமும் சக்தியும் மிச்சப்படும். இதனை ஊக்குவிக்க, ‘கிசான் ட்ரோன்’ திட்டம் 2022-ம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டது.

25
விவசாயத்தில் ட்ரோன் பயன்பாடு

ட்ரோன் பயன்பாட்டின் மூலம் குறைந்த நேரத்தில் ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலத்தில் மருந்துகளை தெளிக்க முடிகிறது. இது, வழக்கமாக தொழிலாளர்களை நம்பி செய்யும் முறையைவிட விரைவாகவும், செலவுக் குறைவாகவும் அமைகிறது. இதனை மேலும் ஊக்குவிக்க, மத்திய அரசு பல்வேறு வகையான மானியங்களை அறிவித்துள்ளது.

35
ரூ.5 லட்சம் வரை மானியம்

சிறு, குறு விவசாயிகள், பட்டியல் இனத்தவர்கள், பழங்குடியினர்கள், பெண்கள் மற்றும் வடகிழக்கு மாநில விவசாயிகளுக்கு 50% மானியம் வழங்கப்படுகிறது. இது அதிகபட்சமாக ₹5 லட்சம் வரை பெறலாம். மற்ற விவசாயிகளுக்கு 40% மானியம் வழங்கப்படுகிறது. அதில் அதிகபட்சமாக  4 லட்சம் ரூபாய் வரை மானியம் பெறலாம். ட்ரோன்களை வாடகைக்கு வழங்கும் நிறுவனங்கள், உழவர் உற்பத்தியாளர் குழுக்கள் மற்றும் தனியார் தொழில்முனைவோர்கள் ஆகியோருக்கும் 40% மானியம் அளிக்கப்படுகிறது.

45
ரூ.52 கோடி நிதி ஒதுக்கீடு

ட்ரோன்களை விவசாயத்திற்கு கொண்டு வரும் திட்டத்தை செயல்படுத்த மத்திய அரசு ₹52 கோடி நிதியை ஒதுக்கியுள்ளது. மேலும், ட்ரோன் மூலம் மருந்து தெளிக்க விரும்பும் விவசாயிகள், அதை பெற்றுக்கொள்ள தங்களுக்கான வேளாண் விரிவாக்க அலுவலகத்தை அணுகலாம். இந்த அலுவலகம் வழியாகவே மானியம் பெறவும், பயன்பாட்டை நன்கு அறிந்து கொள்ளவும் வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

55
மத்திய மாநில அரசுகள் உதவி

ட்ரோன் தொழில்நுட்ப பயிற்சி பெற விரும்பும் விவசாயிகள், தங்களுக்குள்ள அருகிலுள்ள வேளாண் அறிவியல் நிலையங்களை அணுகலாம். இந்த மானிய உதவியுடன், தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்களில் பலரும் ட்ரோன் வாங்கும் எண்ணத்தில் இருக்கின்றனர். இது விவசாயத் துறையின் நவீன மாறுபாட்டுக்கு வழிவகுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Read more Photos on
click me!

Recommended Stories