புதுப்பிக்கத்தக்க எரிசக்தி துறையில் நாங்கள் அடையவேண்டிய இலக்குகள் மிக பெரியவை என்றும் அதனை அடைவதற்காகத்தான் இவ்விதமான நிதி ஒதுக்கீடு மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் மத்திய தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ், தெரிவித்தார்.இது முழுக்க முழுக்க நாட்டின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு செய்யப்பட்ட முடிவாகும் எனவும் அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் கூறினார்.
மின் உற்பத்தியில் அசத்தி வரும் என்.எல்.சி. இந்தியா
என்.எல்.சி. இந்தியா லிமிடெட் (NLC India Ltd) என்பது பொதுத்துறை நிறுவனமாகும். இது நெய்வேலியில் நிலக்கரி (லிக்னைட்) மேம்பாட்டு திட்டங்கள், மின் உற்பத்தி நிலையங்கள் மூலமாக இந்தியாவின் மின்சார தேவை ஒரு முக்கிய பகுதியாக பூர்த்தி செய்து வருகிறது. தற்போது, நாட்டின் பல்வேறு பகுதிகளில் மின்தடை ஒரு சாதாரண விஷயமாகவே உள்ளது. ஆனால் இது விவசாயம், தொழில்துறை, மருத்துவம் போன்ற பல துறைகளில் பெரும் பாதிப்பை ஏற்படுத்துகிறது. இதை முற்றிலுமாக நீக்குவதற்காக, தேசிய மின் வலையமைப்பை (National Grid) வலுப்படுத்தும் திட்டங்களில் இந்த நிதி பயன்படுத்தப்படும்.