ஒரே நேரத்தில் 2 போனஸ்.. தமிழக அரசு ஊழியர்களுக்கு அடித்த மெகா பரிசு!

First Published | Sep 24, 2024, 2:11 PM IST

தமிழக அரசு ஊழியர்களுக்கு தீபாவளிக்கு முன்னர் அகவிலைப்படி உயர்வுடன் போனசும் வழங்கப்பட வாய்ப்புள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. டிஏ உயர்வு மற்றும் போனஸ் தொகை குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Diwali Bonus For Tamil Nadu Govt Employees

தற்போது மத்திய அரசு ஊழியர்கள் இந்த ஆண்டு இரண்டாவது அகவிலைப்படி உயர்வு எப்போது அறிவிக்கப்படும் என்று எதிர்பார்த்து காத்துகொண்டிருக்கின்றனர். இது தொடர்பான அறிவிப்பு விரைவில் வெளியாகும். இந்தப் பின்னணியில் தீபாவளிக்கு முன்னதாக தமிழக அரசு நல்ல செய்தியை வெளியிட வாய்ப்புள்ளது என்று தகவல் வெளியாகி இருக்கிறது. அரசு ஊழியர்களுக்கு போனஸ் பரிசாக டிஏ அறிவிக்கப்படலாம் என்று கூறப்படுகிறது.

7th Pay Commission

இதற்கான கோப்பு தயாராகி வருவதாக அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. மத்திய அரசு ஊழியர்களைப் பொறுத்தவரை, இந்த ஆண்டு இரண்டாவது டிஏ 3 சதவீதம் அதிகரிக்க வாய்ப்புள்ளது. இதன் மூலம் மொத்த டிஏ 53 சதவீதத்தை எட்டும். மத்திய அரசின் இந்த அறிவிப்பு ஜூலை 1ம் தேதி முதல் அமலுக்கு வருகிறது. தமிழக அரசு ஊழியர்களுக்கு ஒரே நேரத்தில் இரட்டை ஜாக்பாட் பரிசாக வழங்கப் போவதாக பரப்பப்பட்டு வருகிறது.

Tap to resize

Diwali Bonus

இந்த ஆண்டு மார்ச் மாதத்தில் தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் அரசு அகவிலைப்படியை 4 சதவீதம் உயர்த்தியது தெரிந்ததே. உயர்த்தப்பட்ட அகவிலைப்படி ஜனவரி 1, 2024 முதல் அமலுக்கு வரும். மாநில அரசு ஊழியர்களுக்கான மற்றொரு அகவிலைப்படி அறிவிப்பு தீபாவளியை முன்னிட்டு வெளியிடப்படும் என அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இந்த முறை டிஏ அதிகரிப்புடன் தீபாவளி போனஸையும் வழங்க அரசு முடிவு செய்துள்ளதாக தெரிகிறது.

TN Govt

இது தொடர்பான கோப்பை அதிகாரிகள் தயார் செய்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் கிரீன் சிக்னலுக்குப் பிறகு அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும்.  தீபாவளி பரிசாக டிஏ 4 சதவீதம் அதிகரிக்க வாய்ப்புள்ளது. அரசிதழ் அல்லாத ஊழியர்களுக்கும் போனஸ் அறிவிக்கப்படலாம் என்று கூறப்படுகிறது. இதற்கான அறிவிப்பு செப்டம்பர் கடைசி வாரம் அல்லது அக்டோபர் முதல் வாரத்தில் வெளியாகும் என்று அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

DA Hike 2024

அகவிலைப்படி உயர்வு மாநில கருவூலத்திற்கு ரூ.3 ஆயிரம் கோடி கூடுதல் சுமையை ஏற்படுத்தும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. அரசிதழ் அல்லாத ஊழியர்களுக்கு கடந்த காலங்களில் ரூ.7 ஆயிரம் போனஸ் வழங்கப்பட்டு வந்த நிலையில், இந்த ஆண்டு போனஸ் சற்று அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. விரைவில் இதுகுறித்த அறிவிப்பு வெளியாக உள்ளது.

ஒரு செல்ஃபி உங்க பேங்க் அக்கவுண்ட்டை காலியாக்கி விடும் உஷார்.. இதை நோட் பண்ணுங்க!

Latest Videos

click me!