செல்வ மகள் திட்டம் க்ளோஸ் ஆகாமல் இருக்க அக்டோபர் 1 க்கு முன் இதைச் செய்யுங்க!

First Published | Sep 24, 2024, 1:26 PM IST

சுகன்யா சம்ரித்தி யோஜனா எனப்படும் செல்வ மகள் திட்டத்தில் உங்களுக்கும் கணக்கு இருக்கிறதா? அக்டோபர் 1ஆம் தேதிக்கு முன் இதைச் செய்ய வேண்டும். இல்லையெனில் அரே கணக்கை முடித்து வைத்துவிடும்.

Selva Magal Scheme

செல்வ மகள் எனப்படும் சுகன்யா சம்ரித்தி யோஜனா திட்டத்தின் கீழ் கணக்கு வைத்திருப்பவர்களில் சிலரது கணக்குகளை அக்டோபர் 1ஆம் தேதிக்குள் அரசே முடித்து வைக்க வாய்ப்பு உள்ளது. இத்திட்டத்தில் முதலீடு செய்திருப்பவர்கள் கணக்கு மூடப்படுவதைத் தவிர்க்க செய்யவேண்டியது என்ன என்று தெரிந்துகொள்ளலாம்.

Sukanya Samriddhi Yojana

சுகன்யா சம்ரித்தி யோஜனா தொடர்பான விதிகளை அரசாங்கம் சமீபத்தில் மாற்றியுள்ளது. ஒழுங்கற்ற முறையில் திறக்கப்பட்ட சேமிப்பு கணக்குகளை முறைப்படுத்த பொருளாதார விவகாரங்கள் துறை சமீபத்தில் புதிய வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளது. இது தொடர்பான அரசாணைப்படி ஒழுங்கற்ற கணக்குகளை சரிசெய்ய செப்டம்பர் இறுதி வரை அவகாசம் கொடுக்கப்பட்டுள்ளது.

Latest Videos


SSY account

செல்வ மகள் திட்டத்தின் புதிய விதிகள் அக்டோபர் 1, 2024 முதல் அமலுக்கு வரும். எனவே அதற்கு முன் இந்தக் கணக்கு தொடர்பான தவறுகளைத் திருத்துமாறு மக்களை அரசாங்கம் கேட்டுக்கொண்டிருக்கிறது. எதிர்காலத்தில் எந்த ஒரு பிரச்சனையும் வராமல் தவிர்க்க, தேவையான திருத்தத்தை விரைவாகச் செய்வது நல்லது

Sukanya Samriddhi Account Update

பெண் குழந்தைகளின் தாத்தாவோ பாட்டியோ சுகன்யா சம்ரித்தி யோஜனாவின் கீழ் கணக்கைத் திறந்திருந்தால், அதைச் சரிசெய்ய வேண்டும். புதிய விதிகளின்படி, செல்வ மகள் திட்டத்தின் கீழ் தொடங்கப்பட்ட கணக்குகள் பெண் குழந்தைகளின் சட்டப்பூர்வமான பாதுகாவலர் அல்லது பெற்றோரால் மட்டுமே திறக்கப்பட வேண்டும். அவ்வாறு இல்லாத கணக்குகள் குழந்தைகளின் சட்டபூர்வ பாதுகாவலரின் பெயருக்கு மாற்றப்பட வேண்டும். இது இப்போது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

முன்னதாக, தாத்தா பாட்டிகளும் தங்கள் பேத்திகளுக்காக கணக்கு தொடங்க அனுமதிக்கப்பட்ட நிலையில், இப்போது புதிய விதியின்படி, சட்டப்பூர்வ பாதுகாவலர்கள் அல்லது பெற்றோர்கள் மட்டுமே இந்தக் கணக்குகளைத் திறக்கவும் மூடவும் முடியும்.

Sukanya Samriddhi Yojana for Girl Child

பழைய கணக்கை மூட அல்லது மாற்ற சில ஆவணங்கள் தேவைப்படும். கணக்கு பற்றிய அனைத்து தகவல்களுக்காக போஸ்ட் ஆபிஸ் கணக்கு பாஸ்புக் வேண்டும். பெண்ணின் பிறப்புச் சான்றிதழ், புதிய பாதுகாவலரின் அடையாளச் சான்று ஆகியவை தேவை.

இந்த ஆவணங்களுடன் கணக்கு தொடங்கப்பட்ட தபால் அலுவலகம் அல்லது வங்கியில் கிடைக்கும் விண்ணப்பப் படிவத்தையும் நிரப்பி சமர்ப்பிக்க வேண்டும்.  ஏற்கனவே கணக்கு தொடங்கியவர்களும் (தாத்தா, பாட்டி) புதிய பாதுகாவலர் அல்லது பெற்றோரும் இந்தப் படிவத்தில் கையெழுத்திட வேண்டும். நேரில் சென்று கணக்கில் மாற்றம் செய்ய கோரிக்கை வைக்க வேண்டும்.

Sukanya Samriddhi account interest

படிவம் மற்றும் ஆதார ஆவணங்களைச் சமர்ப்பித்த பிறகு, வங்கி அல்லது தபால் அலுவலக ஊழியர்கள் விண்ணப்பத்தை ஆவணங்களுடன் ஒப்பிட்டு மதிப்பீடு செய்வார்பகள். விவரங்கள் அனைத்தும் சரியாக இருக்கிறதா என்று பார்ப்பார்கள். தேவைப்பட்டால், கூடுதல் தகவல்களும் கேட்கப்படலாம். சரிபார்ப்பு முடிந்ததும், புதிய பாதுகாவலர் பற்றிய தகவலுடன் கணக்கு புதுப்பிக்கப்படும்.

சுகன்யா சம்ரித்தி யோஜனா கணக்கு வைத்திருப்பவர்கள் 1 அக்டோபர் 2024 செவ்வாய்க்கிழமைக்கு முன் இந்தப் பணியைச் செய்ய வேண்டும். இல்லையெனில், உங்கள் கணக்கை அரசு தானாகவே மூடிவிடும்.

click me!