5 வருஷத்தில் வட்டி மட்டும் 2 லட்சத்துக்கு மேல! டைம் டெபாசிட் திட்டத்தில் முதலீடு செய்வது எப்படி?

First Published Sep 24, 2024, 11:55 AM IST

போஸ்ட் ஆபிசில் சிறு சேமிப்புக்கான பல்வேறு திட்டங்கள் செயல்பாட்டில் உள்ளன. தபால் அலுவலகம் மூலம் இந்தத் திட்டங்களில் பணத்தை முதலீடு செய்பவர்கள் அதிக வட்டி வருமானத்தைப் பெறலாம். அந்த வகையில் டைம் டெபாசிட் திட்டத்தில் 5 ஆண்டுகளில் வட்டி மட்டும் 2 லட்சம் கிடைக்கும்.

Post Office Saving Scheme

வங்கிகளில் உள்ள FD திட்டத்தைப் போலவே போஸ்ட் ஆபிஸ் சேமிப்பு திட்டமும் முதலீட்டிற்கு மிகவும் பிரபலமானது. போஸ்ட் ஆபீஸ் சேமிப்பு திட்டத்தில் முதலீடு செய்வதன் மூலம் அதிக வருமானத்தையும் பெறலாம். போஸ்ட் ஆபிஸில் பல சேமிப்பு திட்டங்கள் இருந்தாலும், இவற்றில் போஸ்ட் ஆபிஸ் டைம் டெபாசிட் திட்டம் தனித்துவமானது.

Post Office Time Deposit scheme

போஸ்ட் ஆபிஸ் டைம் டெபாசிட் திட்டத்தில் முதலீடு செய்வதன் மூலம், அதிக வட்டி விகிதம் கிடைக்கிறது. அதிக வட்டியுடன், வரிச் சலுகையின் பலனையும் வழங்குகிறது. இந்த திட்டத்திற்கு அரசு அதிக முக்கியத்துவம் கொடுத்து செயல்படுத்தி வருகிறது. இந்தத் திட்டத்தில் யார் வேண்டுமானாலும் முதலீடு செய்யலாம். வயது வரம்பு ஏதும் இல்லை.

Latest Videos


Five-Year Time Deposits

தபால் அலுவலகத்தில் டைம் டெபாசிட் திட்டத்தில் இப்போது 7.5 சதவீதம் வட்டியை வழங்குகிறது. இந்தத் திட்டத்தில் அதிகபட்சம் 5 ஆண்டுகள் முதலீடு செய்யலாம். இந்தத் திட்டத்தில் முதலீட்டுக் காலத்தைப் பொறுத்து வட்டி விகிதமும் மாறுகிறது.

Post Office Schemes

ஒரு வருட முதலீட்டுக்கு 6.9 சதவீதம் வட்டி வழங்கப்படுகிறது. 2 முதல் 3 ஆண்டுகளுக்கு டெபாசிட் செய்யும்போது, இத்திட்டத்தில் 7 சதவீதம் வட்டி கிடைக்கிறது. 5 வருடங்களுக்கு முதலீடு செய்தால் 7.5 சதவீதம் வட்டி விகிதம் வழங்கப்படுகிறது.

Post Office Interest Rates,

போஸ்ட் ஆபீஸ் டைம் டெபாசிட்டுக்கான மொத்த வட்டியை கணக்கிட்டால் லட்சக்கணக்கில் இருக்கும். எடுத்துக்காட்டாக, ஒருவர் 5 வருடத்திற்கு 5 லட்சம் ரூபாய் முதலீடு செய்கிறார் என்றால், திட்டம் முடிந்தவுடன் முதிர்வுத் தொகையாக மொத்தம் ரூ.7,24,974 கிடைக்கும். அதாவது, ரூ.2,24,974 வட்டியாகக் இருக்கும்.

click me!