போஸ்ட் ஆபிஸ் திட்டத்தில் தினமும் 250 ரூபாய் சேமித்தால் 24 லட்சத்துக்கு மேல் கிடைக்கும்!

First Published Sep 24, 2024, 10:09 AM IST

பொது வருங்கால வைப்பு நிதி என்பது நீண்ட கால முதலீட்டுக்கான அரசுத் திட்டங்களில் ஒன்றாகும். இத்திட்டத்தில் முதலீடு செய்தால், வரிச் சலுகைகளையும் பெறலாம். ஆண்டுக்கு ரூ.500 முதல் ரூ.1.5 லட்சம் வரை முதலீடு செய்யலாம்.

Post Office PPF Scheme

பாதுகாப்பான முதலீடு மற்றும் உத்தரவாதமான வருமானத்தை விரும்பும் முதலீட்டாளர்களுக்கு போஸ்ட் ஆபிஸ் திட்டங்கள் ஒரு சிறந்த வழி. வங்கிகளைப் போலவே, தபால் நிலையங்களிலும் பல திட்டங்கள் உள்ளன. தபால் அலுவலகத்தின் பொது வருங்கால வைப்பு நிதித் திட்டம் நீண்ட கால முதலீட்டாளர்களுக்கான சிறப்புத் திட்டம்.

Post Office PPF Scheme

பிபிஎஃப் திட்டம் 7.1 சதவீதம் வட்டியை வழங்குகிறது. இந்தத் திட்டத்தில் ஆண்டுதோறும் குறைந்தபட்சம் ரூ.500 முதல் அதிகபட்சம் ரூ.1.5 லட்சம் வரை முதலீடு செய்யலாம். இந்தத் திட்டத்தின் மூலம் முதலீடு செய்தால் பெரிய தொகையைச் சேர்க்கலாம். இந்தத் திட்டத்தில் வரிச் சலுகைகளையும் பெற முடியும்.

Latest Videos


Post Office PPF Scheme

இந்தத் திட்டம் 15 வருடங்களுக்கானது. இத்திட்டத்தில் ஒவ்வொரு நாளும் சிறிய தொகையைச் சேமிப்பதன் மூலம் முதிர்வுக் காலத்தில் பெரிய தொகையைச் உருவாக்கலாம். பிபிஎஃப் திட்டத்திற்காக தினமும் ரூ.250 சேமித்து, ஒவ்வொரு மாதமும் ரூ.7500 முதலீடு செய்தால், ஆண்டுக்கு மொத்த முதலீடு ரூ.90,000 ஆக இருக்கும்.

Post Office PPF Scheme

PPF கால்குலேட்டரின்படி கணக்கிட்டால், 90,000 ரூபாய் ஆண்டு முதலீட்டை 15 ஆண்டுகளுக்குத் தொடர்ந்தால், மொத்தம் 13,50,000 ரூபாய் முதலீடு செய்யப்பட்டிருக்கும். இதற்கு 7.1% வட்டி விகிதம் கிடைத்தால், ஆண்டுக்கு 10,90,926 ரூபாய் வட்டி வரும். இது 15 ஆண்டுகளில் மொத்தம் 24,40,926 ரூபாய் வட்டி சேர்ந்துவிடும்.

Post Office PPF Scheme

வரிச் சேமிப்பைப் பொறுத்தவரை PPF ஒரு நல்ல திட்டமாகக் கருதப்படுகிறது. இது ஒரு EEE வகை திட்டமாகும். இதில், ஒவ்வொரு ஆண்டும் டெபாசிட் செய்யப்படும் தொகைக்கு வரி இல்லை, இந்தத் தொகைக்கு ஒவ்வொரு ஆண்டும் கிடைக்கும் வட்டி மற்றும் முதிர்வு காலத்தில் பெறப்படும் முழுத் தொகைக்கும் வரி விலக்கு அளிக்கப்படுகிறது. EEE பிரிவின் கீழ் வரும் பொது வருங்கால வைப்புநிதித் திட்டத்தில் செய்யும் முதலீடு, வட்டி மற்றும் முதிர்வுத் தொகையை ஆகியவற்றில் வருமான வரி சேமிப்புக்கான வாய்ப்பும் உள்ளது.

Post Office PPF Scheme

PPF கணக்கு வைத்திருப்பவர்களுக்கு கடன் வசதியும் கிடைக்கும். PPF கணக்கில் டெபாசிட் செய்யப்பட்ட தொகையின் அடிப்படையில் கடன் பெறலாம். இந்தக் கடன் பிணையம் இல்லாத மற்ற கடன்களை விட குறைவான வட்டியுடன் கிடைக்கும் என்பதும் குறிப்பிடத்தக்கது. PPF கணக்கின் வட்டி விகிதங்களை விட PPF கடனுக்கான வட்டி விகிதம் 1% மட்டுமே அதிகம். அதாவது, PPF கணக்கில் டெபாசிட் செய்துள்ள தொகைக்கு 7.1% வட்டி கிடைத்தால், இத்திட்டத்தின் கீழ் வாங்கும் கடனுக்கு 8.1% வட்டி செலுத்தினால் போதும்.

click me!