இந்தியாவிலேயே அதிக சம்பளம் வழங்கும் மாநிலம் இதுதான்.. தமிழ்நாடு எந்த இடத்தில் உள்ளது தெரியுமா?

First Published | Sep 25, 2023, 3:02 PM IST

வெளி மாநிலங்களில் வேலை செய்யும் போது அடிப்படை ஊதியத்தை தவிர கூடுதல் கொடுப்பனவுகளும் கிடைக்கும். இதனால் சம்பளம் அதிகமாக கிடைக்கும்.

பொதுவாக ஒரு ஊழியரின் சம்பளம் என்பது பாலினம், இடம், கல்வி மற்றும் அனுபவம் போன்ற பல்வேறு காரணிகளைப் பொறுத்து மாறுபடுகிறது. ஒவ்வொரு துறையிலும், துறையிலும் பெண்களை விட ஆண்கள் பெரும்பாலும் அதிகம் சம்பாதிக்கிறார்கள். மேலும் ஒவ்வொரு மாநிலத்திற்கு ஏற்ப சம்பளம் மாறும். எனவே பலரும் தங்களின் சொந்த மாநிலங்களை விட்டு வெளி மாநிலங்களில் வேலை செய்வதை விரும்புகின்றனர். வெளி மாநிலங்களில் வேலை செய்யும் போது அடிப்படை ஊதியத்தை தவிர கூடுதல் கொடுப்பனவுகளும் கிடைக்கும். இதனால் சம்பளம் அதிகமாக கிடைக்கும்.

அந்த வகையில் இந்தியாவில் அதிக சம்பளம் வழங்கும் 10 மாநிலங்கள் குறித்து பார்க்கலாம். அந்த வகையில் அதிகபட்ச சம்பளம் வழங்கும் மாநிலங்களில் உத்தரப்பிரதேசம், மேற்கு வங்கம், மகாராஷ்டிரா, பீகார், ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம், தமிழ்நாடு மற்றும் கர்நாடகா ஆகிய மாநிலங்கள் இடம்பெற்றுள்ளன.

Tap to resize

உத்தரப்பிரதேசம் : இந்தியாவில் அதிகம் சம்பளம் வழங்கும் மாநிலங்களில் உத்தரப்பிரதேசம் முதலிடத்தில் உள்ளது. இங்கு ஒருவரின் மாத சம்பளம் ரூ. 20,730 ஆகும்.

மேற்கு வங்கம் : அதிகம் சம்பளம் வழங்கும் பட்டியலில் மேற்குவங்கம் 2-வது இடத்தில் உள்ளது. இங்கு ஒருவரின் சராசரி மாதச்சம்பளம் ரூ. 20.210 ஆகும்.

Mumbai Double Decker Bus

மகாராஷ்டிரா : அதிக சம்பளம் வழங்கும் பட்டியலில் மகாராஷ்டிரா 3-வது இடத்தில் உள்ளது. இங்கு ஒரு நபரின் சராசரி மாத சம்பளம் ரூ.20,011 ஆகும்.

பீகார் : நாட்டின் மிகவும் பின் தங்கிய மாநிலங்களில் ஒன்றாக கருதப்படும் பீகார் அதிக சம்பளம் வழங்கும் பட்டியலில் 4-வது இடத்தில் உள்ளது. இங்கு ஒருவரின் சராசரி மாதச்சம்பளம் ரூ. 19,960 ஆகும். 

ராஜஸ்தான் & மத்திய பிரதேசம் : நாட்டின் அதிக சம்பளம் வழங்கும் பட்டியலில் 2 மாநிலங்கள் 5-வது இடத்தில் ராஜஸ்தான் மற்றும் மத்திய பிரதேசம் ஆகியவை உள்ளன. இங்கு சராசரி மாத வருமானம் ரூ.19,740 ஆகும்.

chennai

தமிழ்நாடு : அதிகம் சம்பளம் வாங்கும் மாநிலங்களில் தமிழ்நாடு 6-வது இடத்தில் உள்ளது. தொழில்துறை நடவடிக்கைகளுக்கு பெயர் போன தமிழ்நாட்டில் ஒருவரின் சராசரி மாத வருமானம் ரூ. 19,600 ஆகும்.

நாட்டின் அதிக சம்பளம் வாங்கும் பட்டியல் கர்நாடகா 7-வது இடத்தில் உள்ளது. இங்கு ஒருவரின் மாத சம்பளம் ரூ.19,150 ஆகும். 

நாட்டின் அதிக சம்பளம் வாங்கும் பட்டியல் குஜராத் 8-வது இடத்தில் உள்ளது. இங்கு ஒருவரின் மாத சம்பளம் ரூ.18,880 ஆகும். 

ஒடிசா : அதிக சம்பளம் வாங்கும் மாநிலங்களில் ஒடிசா 9-வது இடத்தில் உள்ளது. இங்கு ஒருவரின் மாத வருமானம் ரூ. 18,790

ஆந்திரா : இந்த பட்டியலில் ஆந்திரா 10-வது இடத்தில் உள்ளது. இங்கு ஒருவரின் சராசி மாத சம்பளம் ரூ.18,520 ஆகும்.

Latest Videos

click me!