கிராமப்புறங்களில் தொழில் தொடங்கப் போறீங்களா? அதிக லாபம் கொடுக்கும் தொழில் வாய்ப்புகள் எத்தனையோ இருக்கு!

First Published | Sep 21, 2023, 9:02 AM IST

கிராமப்புற சமூகத்தின் தேவையைப் பயன்படுத்தி, அதே நேரத்தில் உங்களுக்கு நிலையான வருமானத்தை உருவாக்கக்கூடிய பல வணிக வாய்ப்புகள் உள்ளன. இந்தத் தொழில்கள் எல்லா நேரத்திலும் செழிப்பாக இருக்கும். கணிசமான வருமானத்தையும் அளிக்கும்.

டீக்கடை

நகர்ப்புறமாக இருந்தாலும் கிராமப்புறமாக இருந்தாலும் மக்கள் ஒரேபோல விரும்புவது டீ.  எனவே இது ஒரு நம்பிக்கைக்குரிய வணிக வாய்ப்பாக அமைகிறது.

மருந்தகம்

பல கிராமங்களில் மருந்துகள் கிடைக்காததால், அனைத்து மருந்துகளையும் சேமித்து வைக்கும் மருந்தகங்களுக்கு அதிக தேவை உள்ளது. தேவையான உரிமங்கள் பெற்று ஆரம்ப முதலீட்டைச் செய்த பிறகு, நிலையான வருமானம் கிடைக்கும்.

Tap to resize

கோழிப்பண்ணை

சிறிய அளவிலான கோழி வளர்ப்பு பண்ணை ஆரம்பிக்கலாம். கால்நடை வளர்ப்பையும் முயற்சி செய்யலாம். விவசாயத்துடன் தொடர்புடைய வேறு சில தொழில்களுடன் ஒப்பிடும்போது இந்தப் பண்ணை தொழிலுக்கு குறைவான மூலதனமும் உழைப்பும் தேவைப்படுகிறது.

வாழை சிப்ஸ் தயாரித்தல்

மற்ற சிப்ஸ்களைவிட வாழை சிப்ஸ்களுக்கு அதிகமான தேவை உள்ளது. இந்த தின்பண்டங்களை தயாரித்து விற்பனை செய்யும் தொழிலை குறைந்த முதலீட்டில் தொடங்கிவிடலாம். சிப்ஸ் தயாரிப்பும் ஒப்பீட்டளவில் எளிமையானது. இது உணவுத் துறையில் நுழைய விரும்பும் தொழில்முனைவோருக்கு நல்ல தேர்வாக இருக்கும். 

மாவு மில்

பாக்கெட்களில் விற்கப்படும் மாவு கிடைக்காத கிராமங்களில், ஒரு மாவு அரைத்துக் கொடுக்கும் தொழில் வெற்றிகரமான தொழிலாக இருக்கும். உள்ளூர் மக்களின் அத்தியாவசிய தேவையை பூர்த்தி செய்வதால் இந்தத் தொழில் நிலையான வருமானம் கிடைக்கும்.

ஆயில் மில்

மாவு ஆலைகளைப் போலவே, சோயாபீன்ஸ், நிலக்கடலை மற்றும் கடுகு ஆகியவற்றில் இருந்து எண்ணெயைப் பிரித்தெடுக்கும் சிறிய ஆயில் மில் ஒன்றை நிறுவலாம்.

பலசரக்குக் கடை

அனைத்து விதமான அடிப்படைத் தேவைகளுக்கும் கைகொடுக்கும் பலசரக்குக் கடை தொடங்கினால் கிராமப்புறத்தில் சிறப்பாகச் செயல்படும் வாய்ப்பு அதிகம். இந்தத் தொழிலில் நீண்ட காலத்திற்கு லாபம் கிடைக்கும்.

பால் விற்பனை

உள்ளூரில் உற்பத்தி செய்யப்படும் பாலை அருகிலுள்ள நகர்ப்புறங்களுக்கு விநியோகிக்க கிராமப்புறங்களில் பால் விநியோகத் தொழிலைத் தொடங்குவதும் நல்ல வாய்ப்பாக இருக்கும். இது உள்ளூர் விவசாயிகளை ஆதரிப்பது மட்டுமல்லாமல் நுகர்வோருக்கும் பயன்படும்.

Latest Videos

click me!