தங்கப் பத்திரம் விற்பனை இன்று மீண்டும் தொடக்கம்! இந்த 2வது வாய்ப்பை நழுவ விடாதீங்க!

Published : Sep 11, 2023, 04:11 PM IST

நடப்பு நிதியாண்டின் இரண்டாவது சீரிஸ் தங்கப் பத்திரம் விற்பனை இரண்டாவது முறையாக செப்டம்பர் 11 முதல் செப்டம்பர் 15 வரை விற்பனை செய்யப்பட உள்ளது.

PREV
15
தங்கப் பத்திரம் விற்பனை இன்று மீண்டும் தொடக்கம்! இந்த 2வது வாய்ப்பை நழுவ விடாதீங்க!
Sovereign Gold Bonds

நடப்பு நிதியாண்டின் இரண்டாவது சீரிஸ் தங்கப் பத்திரம் விற்பனை இரண்டாவது முறையாக செப்டம்பர் 11 முதல் செப்டம்பர் 15 வரை விற்பனை செய்யப்பட உள்ளது.  முதல் சீரீஸ் தங்கப் பத்திர விற்பனை கடந்த ஜூன் 19 முதல் 23 வரை நடைபெற்ற நிலையில் இரண்டாவது முறையாக இன்று முதல் தங்கப் பத்திரங்கள் விற்பனைக்கு வந்துள்ளன.

25
Who to buy Sovereign Gold Bonds

தங்கப் பத்திரத் திட்டத்தில் யார் வேண்டுமானாலும் முதலீடு செய்யலாம். ஒரு கிராமுக்கு ரூ.5,923 என வெளியீட்டு விலையை ரிசர்வ் வங்கி நிர்ணயித்துள்ளது. தங்க பத்திர முதலீட்டுக்கு 6 மாதங்களுக்கு ஒரு முறை 2.5 சதவீதம் வட்டி வழங்கப்படும். 8 ஆண்டுகள் கழித்து அன்றைய 24 காரட் தங்கத்தின் விலைக்கு நிகரான முதிர்வுத் தொகை வழங்கப்படும்.

35
Sovereign Gold Bond scheme

ஆதார் அட்டை, பான்கார்டு, வங்கி சேமிப்பு கணக்கு புத்தகம் நகல் ஆகியவற்றை பயன்படுத்தி பெயர் பதிவு செய்து தங்கப் பத்திரத்தைப் பெற்றுக்கொள்ளலாம். ஸ்டாக் ஹோல்டிங் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா லிமிடெட், தபால் நிலையங்கள், பங்குச் சந்தைகள் ஆகியவற்றில் தங்கப் பத்திரங்களை வாங்கலாம். சிறிய நிதி வங்கிகள், பேமெண்ட் வங்கிகள் மூலம் தங்கப் பத்திரங்கள் விற்கப்படுவது இல்லை.

45
Sovereign Gold Bonds 2023

ஆன்லைன் மூலம் தங்கப் பத்திரங்களை வாங்குபவர்களுக்கு ரிசர்வ் வங்கி சிறப்புத் தள்ளுபடி வழங்குகிறது. ஆன்லைனில் பணம் செலுத்தி தங்கப் பத்திரம் வாங்கினால் கிராம் ஒன்றுக்கு ரூ.50 தள்ளுபடி தள்ளுபடி கிடைக்கும். இதன் மூலம் ஒரு கிராம் தங்கத்தை ரூ.5,873 விலையில் வாங்கலாம்.

55
Sovereign Gold Bonds Series II

இந்த தங்கப்பத்திரத்தின் முதிர்ச்சி காலம் 8 ஆண்டுகளாகும். ஆண்டுக்கு 2 முறை 2.5 சதவீதம் அளவில் வட்டி கணக்கிட்டு வழங்கப்படும் தனிநபர் அதிகபட்சமாக 4 கிலோ மதிப்பிலும், இந்துக் கூட்டுக்குடும்பத்தினர் 4 கிலோ அளவுக்கும், அறக்கட்டளை மற்றும் சிறு நிறுவனங்கள் அதிகபட்சமாக 20 கிலோ மதிப்புக்குக்கும் தங்கப்பத்திரங்கள் வாங்கலாம்.

Read more Photos on
click me!

Recommended Stories