ஏ.டி.எம். பின் நம்பர் மறந்துவிட்டதா? ஈசியாக புதிய பின் நம்பர் பெற இரண்டு வழிகள் இருக்கு!

Published : Sep 11, 2023, 07:30 PM ISTUpdated : Sep 11, 2023, 07:43 PM IST

ஏடிஎம் கார்டு பின் நம்பர் மறந்துவிட்டால் கவலைப்படத் தேவையில்லை. ஏடிஎம் இயந்திரம் மூலமாகவும் ஆன்லைன் மூலமாகவும் பாதுகாப்பாக புதிய பின் நம்பரை நாமே எளிதாக உருவாக்க முடியும்.

PREV
19
ஏ.டி.எம். பின் நம்பர் மறந்துவிட்டதா? ஈசியாக புதிய பின் நம்பர் பெற இரண்டு வழிகள் இருக்கு!
ATM Card

இப்போது பெரும்பாலான மக்கள் பணம் எடுப்பதற்கு வங்கிக்குச் செல்வதில்லை. ஏடிஎம் மூலம் பணம் எடுப்பது சகஜமாகிவிட்டது. ஆனால், ஏடிஎம் கார்டு பின் நம்பர் மறந்துவிட்டால் பணம் எடுக்கமுடியாதபடி நிலை ஏற்படும். அப்போது கவலைப்படத் தேவையில்லை. ஏடிஎம் இயந்திரம் மூலமாகவும் ஆன்லைன் மூலமாகவும் பாதுகாப்பாக புதிய பின் நம்பரை நாமே எளிதாக உருவாக்க முடியும்.

29
ATM Card PIN

எந்த வங்கியில் கணக்கு இருக்கிறதோ அந்த வங்கியின் ஏ.டி.எம். மையத்திறகுச் செல்ல வேண்டும். வேறு வங்கியின் ஏடிஎம் மூலம் பின் நம்பரை மாற்ற முடியாது.

39
How to change ATM PIN

வங்கிக் கணக்கு உள்ள ஏடிஎம் மையத்திற்குச் சென்று கார்டை மிஷினில் செருகியதும், Forgot PIN என்ற ஆப்ஷனை தேர்வு செய்யவும்.

49
Change ATM Card PIN

வங்கி கணக்குடன் இணைக்கப்பட்டுள்ள மொபைல் எண்ணை டைப் செய்யும்படி திரையில் ஒரு செய்தி தோன்றும். அப்போது மொபைல் எண்ணை மிஷினில் டைப் செய்ய வேண்டும்.

59
Forgot ATM PIN

மொபைல் நம்பரைப் பதிவு செய்ததும் அந்த எண்ணுக்கு OTP எண் கிடைக்கும். அதை மிஷினில் டைப் செய்த பிறகு, புதிய ஏடிஎம் பின் (ATM PIN) உருவாக்கும் வாய்ப்பு வழங்கப்படும்.

69
Change ATM PIN online

ஆன்லைனிலும் ஏடிஎம் பின் நம்பரை மாற்ற முடியும். கணக்கு வைத்திருக்கும் வங்கியின் அதிகாரபூர்வ நெட்பேங்கிங் இணையதளத்தில் ஏடிஎம் பின் நம்பரை மாற்றிக்கொள்ளலாம்.

79
ATM PIN change options

ஆன்லைன் பேங்கிங் இணையதளத்தில் உள்ளே நுழைந்ததும் ஏடிஎம் கார்டு பகுதிக்கு சென்று PIN மாற்றும் ஆப்ஷனை கிளிக் செய்யவும்.

89
ATM PIN generation

அப்போது, ஏடிஎம் கார்டில் உள்ள CVV, கார்டு எண்ணின் கடைசி சில இலக்கங்கள் காலாவதி தேதி போன்ற விவரங்களைக் பதிவிட வேண்டும்.

99
Regenerate ATM PIN

பின், வங்கி கணக்குடன் பதிவு செய்யப்பட்ட மொபைல் நம்பரை பதிவிட்டால், அந்த எண்ணுக்கு OTP அனுப்பப்படும். அதை திரையில் அதற்கான இடத்தில் டைப் செய்து சமர்ப்பித்தால், புதிய பின் நம்பரை உருவாக்கலாம்.

click me!

Recommended Stories