ஆதார் கார்டு வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்! ஜூலை 1 முதல் இந்த சேவை முற்றிலும் இலவசம்!

Published : Jun 23, 2026, 04:08 PM IST

Aadhaar card update 2026: இந்தியாவில் ஆதார் கார்டில் மிகப்பெரும் அப்டேட் வந்துள்ளது ஆதார் கார்டில் இ-மெயில் ஐடியை இணைக்க அல்லது மாற்ற திட்டமிருந்தால் அந்த கட்டணமுமின்றி இலவசமாக செய்யலாம். இது குறித்து இந்த செய்தியில் விரிவாக பார்க்கலாம்.

PREV
14
ஆதாரில் அதிரடி அப்டேட்

இந்தியாவில் ஆதார் கார்டு ஒரு முக்கியமான ஆவணமாக உள்ளது. வங்கிக் கணக்கு தொடங்குவதில் இருந்து மொபைல் சிம் கார்டு வாங்குவது வரை எல்லாத்துக்கும் ஆதார் அத்தியாவசியமாக இருக்கிறது. இந்த நிலையில் ஆதார் கார்டில் புது அப்டேட் வந்துள்ளது. 

அதாவது உங்கள் ஆதார் கார்டில் இ-மெயில் ஐடியை இணைக்கவோ அல்லது பழைய ஐடியை மாற்றவோ திட்டமிருந்தால், இந்த வேலையை சீக்கிரம் முடியுங்கள். இந்திய தனித்துவ அடையாள ஆணையம் (UIDAI) இந்த சேவையை தற்காலிகமாக இலவசமாக்க உள்ளது. அதாவது, ஜூலை 1 முதல் இந்த சேவை வாடிக்கையாளர்களுக்கு இலவசமாகக் கிடைக்கும். ஆனால், இது ஒரு தற்காலிக சலுகைதான். மக்கள் ஆறு மாதங்களுக்கு இந்த இலவச சேவையைப் பயன்படுத்திக்கொள்ளலாம்.

24
நமக்கு காசு மிச்சமாகும்

UIDAI எடுத்த இந்த முடிவால் பொதுமக்களின் பணம் மிச்சமாகும். இதற்கு முன்பு, இ-மெயிலை மாற்ற அல்லது சேர்க்க 75 ரூபாய் கட்டணம் செலுத்த வேண்டியிருந்தது. UIDAI-யின் புதிய முடிவின்படி, ஜூலை 1, 2026 முதல் டிசம்பர் 2026 வரை இந்த சேவை முற்றிலும் இலவசமாக வழங்கப்படும். பொதுமக்கள் எந்தப் பணமும் செலுத்தத் தேவையில்லை.

34
வீட்டில் இருந்தே இந்த வேலை செய்யலாம்

ஆதாருடன் இ-மெயில் இணைக்க நீங்கள் ஆதார் மையத்திற்குச் சென்று வரிசையில் நிற்க வேண்டியதில்லை. UIDAI தனது அதிகாரப்பூர்வ மொபைல் ஆப் மூலமாகவே இந்த முழு சேவையையும் வழங்குகிறது. உங்கள் போனில் செயலியைத் திறந்து, எளிய வழிமுறைகளைப் பின்பற்றி இ-மெயிலை இணைத்துக்கொள்ளலாம். இது பணத்துடன் உங்கள் நேரத்தையும் மிச்சப்படுத்தும்.

44
இந்த சேவை இலவசமாக கிடைக்க என்ன காரணம்?

UIDAI மற்றும் அரசாங்கம் இந்த சேவையை இலவசமாக வழங்க முக்கிய காரணம், டிஜிட்டல் இலக்குகளை அடைவதுதான். சமீப காலமாக, பெரும்பாலான அரசு மற்றும் நிதிச் சேவைகள் ஆன்லைனில் கிடைக்கின்றன. நாட்டின் ஒவ்வொரு குடிமகனும் தங்கள் இ-மெயில் முகவரியை ஆதாருடன் இணைக்க வேண்டும் என UIDAI விரும்புகிறது. இ-மெயில் ஐடியை இணைப்பதால், OTP அடிப்படையிலான சரிபார்ப்பு மற்றும் ஆன்லைன் KYC செயல்முறைகள் மிகவும் பாதுகாப்பாகவும், வேகமாகவும், எளிதாகவும் மாறும்.

வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.

Read more Photos on
click me!

Recommended Stories