மத்திய அரசு ஊழியர்கள் 8வது ஊதியக் குழுவிற்காக ஆவலுடன் காத்திருக்கின்றனர். புதிய பரிந்துரைகளால் ஊழியர்களின் அடிப்படை சம்பளம், பிட்மெண்ட் ஃபேக்டர் மற்றும் நிலுவைத் தொகையில் பெரும் உயர்வு ஏற்பட வாய்ப்புள்ளது.
8வது ஊதியக் குழு குறித்து மத்திய அரசு ஊழியர்களிடையே பெரிய எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது. 2026 ஜனவரி 1 முதல் அமல்படுத்தப்படலாம் என்ற கணிப்புகள் இருந்தாலும், இதற்கான அதிகாரப்பூர்வ தேதி இன்னும் அறிவிக்கப்படவில்லை. இருந்தாலும், புதிய பரிந்துரைகள் விரைவில் முடிவடையும் நிலையில் இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
25
சம்பள உயர்வு
இந்த குழுவின் பரிந்துரைகள் அமலுக்கு வந்தவுடன், கோடிக்கணக்கான மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களின் சம்பளத்தில் பெரிய மாற்றம் ஏற்படும். குறிப்பாக, இடைப்பட்ட காலத்திற்கு கிடைக்க வேண்டிய நிலுவைத் தொகைகள் பெரிதாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் பலருக்கு இது ஒரு பெரிய நிதி ஆதரவாக அமையும்.
35
20 மாத நிலுவைத் தொகை
சில மதிப்பீடுகளின்படி, சுமார் 20 மாத நிலுவைத் தொகை வழங்கப்படலாம். பணியாளர்களின் அடிப்படை சம்பளத்தைப் பொறுத்து, இந்த தொகை ரூ.3.6 லட்சம் முதல் ரூ.15 லட்சம் வரை இருக்கலாம். இது ஒரே தடவையில் தொகையாக இருந்தால், அந்த ஊழியர்களுக்கு மிகப் பெரிய பலனாக இருக்கும்.
இந்த உயர்வில் முக்கிய பங்கு வகிப்பது ‘பிட்மெண்ட் ஃபேக்டர்’ ஆகும். 7வது ஊதியக் குழுவில் இது 2.57 ஆக இருந்தது. இப்போது ஊழியர் சங்கங்கள் 3.0 முதல் 3.25 வரை உயர்த்த வேண்டும் என கோருகின்றன. இது அமலாகும் பட்சத்தில், குறைந்தபட்ச அடிப்படை சம்பளம் ரூ.18,000 முதல் ரூ.54,000 வரை உயர வாய்ப்பு உள்ளது.
55
அரசு ஊழியர் சம்பளம்
இதே நேரத்தில், ஊழியர்களின் கருத்துகளை மத்திய அரசு MyGov தளத்தின் மூலம் சேகரிக்கிறது. இதற்கான கடைசி தேதி 30 ஏப்ரல் 2026 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. எனினும், இவை அனைத்தும் தற்போது கணிப்புகளாக மட்டுமே உள்ளன. அதிகாரப்பூர்வ அறிவிப்பு வந்த பிறகே இறுதி நிலை தெளிவாகும்.
வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.