உலக சந்தையில் செம்பு விலை உயர்ந்து வருவதால், முதலீட்டாளர்களுக்கு புதிய வாய்ப்புகள் உருவாகியுள்ளன. அடுத்த இரண்டு ஆண்டுகளில் உள்நாட்டுத் தேவை 10-12% அதிகரிக்கும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது.
உலக சந்தையில் செம்பு விலை வேகமாக உயர்ந்து முதலீட்டாளர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. FY2026 தொடக்கத்திலிருந்து சுமார் 40% வரை உயர்ந்த செம்பு, ஜனவரி 2026-ல் டன் ஒன்றுக்கு 13,000 டாலர் அருகில் உச்சத்தை தொட்டது. பின்னர் சற்று சரிந்தாலும், தற்போது பவுண்டுக்கு சுமார் 6 டாலர் அளவில் மீண்டும் நிலைநிறுத்தப்பட்டுள்ளது. கட்டுமானம், புதுப்பிக்கத்தக்க ஆற்றல் திட்டங்கள், மின்சார வாகனங்கள் மற்றும் டேட்டா சென்டர்கள் போன்ற துறைகளில் அதிகரிக்கும் தேவை இந்த உயர்விற்கு காரணமாக கூறப்படுகிறது.
25
2026ல் செம்பு துறைக்கு பொற்காலமா?
இந்த பின்னணியில், இந்தியாவில் செம்பு துறையில் செயல்படும் மூன்று பெரிய நிறுவனங்களின் முதலீட்டாளர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது – இந்துஸ்தான் காப்பர், ஹிண்டால்கோ இண்டஸ்ட்ரீஸ் மற்றும் வேதாந்தா. மதிப்பீட்டு நிறுவனம் ICRA வெளியிட்ட அறிக்கையின்படி, அடுத்த இரண்டு ஆண்டுகளில் இந்தியாவில் செம்பு தேவை ஆண்டுக்கு 10–12% வீதம் அதிகரிக்கும் என கணிக்கப்பட்டுள்ளது.
35
இந்துஸ்தான் காப்பர் பங்கு
அரசு நிறுவனமான இந்துஸ்தான் காப்பர், நாட்டில் முழுமையான ஒருங்கிணைந்த உற்பத்தியாளராக (mine முதல் refining வரை) செயல்படுகிறது. தற்போது ஆண்டு 3.54 மில்லியன் டன் உற்பத்தி திறன் கொண்ட நிறுவனம், 2031க்குள் அதை 12.2 மில்லியன் டனாக உயர்த்த திட்டமிட்டுள்ளது. Q3FY26 காலாண்டில் வருவாய் ரூ.687 கோடியாக 109% உயர்ந்தது; நிகர லாபம் ரூ.156 கோடியாக 147% அதிகரித்துள்ளது.
ஆதித்யா பிர்லா குழுமத்தின் ஹிண்டால்கோ இண்டஸ்ட்ரீஸ், செம்பு மற்றும் அலுமினியம் துறைகளில் வலுவான இடத்தைப் பெற்றுள்ளது. Q3-ல் வருவாய் 14% உயர்ந்து ரூ.66,521 கோடியாக இருந்தாலும், லாபம் 45% குறைந்து ரூ.2,049 கோடியாக இருந்தது. இதற்கு மாறாக வேதாந்தா சிறப்பான வளர்ச்சியை பதிவு செய்தது. Q3FY26-ல் 45 கிலோடன் கத்தோடு உற்பத்தி செய்து, வருவாய் 37% உயர்ந்து ரூ.23,369 கோடியாகவும், நிகர லாபம் 60% உயர்ந்து ரூ.7,807 கோடியாகவும் இருந்தது.
55
செம்பு பங்குகள்
வருங்காலத்தில் இந்தியாவின் மின்மயமாக்கல் மற்றும் உட்கட்டமைப்பு விரிவாக்கம் செம்பு தேவையை மேலும் தூண்டும். ஆனால் உள்நாட்டு உற்பத்தி போதாமை மற்றும் உலகளாவிய செறிவு பற்றாக்குறை போன்ற சவால்கள் உள்ளன. இருப்பினும், வளர்ச்சி வாய்ப்பு அதிகம் என்பதால் செம்பு துறை முதலீட்டாளர்கள் கவனிக்கத்தக்கதாகவே உள்ளது.
வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.