தங்கம் ரூ.1 லட்சத்திற்கு கீழ் சரியப்போகுது.. ரஷ்யாவின் டாலர் முடிவால்… குஷியில் பொதுமக்கள்

Published : Feb 19, 2026, 10:55 AM IST

2026-ல் வரலாறு காணாத உச்சத்தை தொட்ட தங்கத்தின் விலை தற்போது சரியத் தொடங்கியுள்ளது. ரஷ்யாவின் டாலர் வர்த்தக ஆர்வம் மற்றும் மத்திய வங்கிகள் தங்கத்தை விற்கக்கூடும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

PREV
15
சரியப்போகும் தங்க விலை

2025 ஆம் ஆண்டு முதலீட்டாளர்களுக்கு பெரும் லாபம் கொடுத்த தங்கம், 2026 தொடக்கத்தில் வரலாறு காணாத உச்சத்தை எட்டியது. ஜனவரியில் 10 கிராம் தங்கம் ரூ.1,80,000 வரை உயர்ந்த நிலையில், தற்போது விலை சரிவை நோக்கி நகர்கிறது. பிப்ரவரி மாதத்தில் தங்கம் மெதுவாக கீழிறங்கத் தொடங்கியுள்ளதால் முதலீட்டாளர்கள் கவனமாக கண்காணித்து வருகின்றனர்.

25
தங்கம் விலை கணிப்பு

MCX-ல் கடந்த வெள்ளிக்கிழமை தங்கம் ரூ.1,56,200-க்கு முடிவடைந்தது. அதாவது உச்ச விலையை விட சுமார் ரூ.24,500 குறைந்துள்ளது. சர்வதேச சந்தையிலும் இதே நிலைதான். COMEX-ல் தங்க விலை 10.50% சரிந்து $5,046-க்கு வந்துள்ளது. தங்கத்தின் வேகமான ஏற்றம் இப்போது தற்காலிகமாக நின்றுவிட்டதாக நிபுணர்கள் கூறுகின்றனர்.

35
ரஷ்யா டாலர் வர்த்தகம்

இந்த சரிவிற்கு முக்கிய காரணமாக ரஷ்யாவின் புதிய பொருளாதார அணுகுமுறை கருதப்படுகிறது. அமெரிக்காவுடன் டாலர் அடிப்படையிலான வர்த்தகத்தை மீண்டும் தொடங்க ரஷ்யா ஆர்வம் காட்டுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனால் தங்கத்தின் மீது பாதுகாப்பு முதலீட்டு தேவைக்கு பாதிப்பு என மதிப்பிடப்படுகிறது.

45
தங்கம் சரிவு காரணம்

கடந்த சில ஆண்டுகளில் BRICS நாடுகள் அதிக அளவில் தங்கத்தை வாங்கியதால் சந்தையில் பற்றாக்குறை ஏற்பட்டது. ஆனால் டாலருக்கு மீண்டும் திரும்பும் சூழல் உருவானது, மத்திய வங்கிகள் தங்கள் தங்க சேமிப்புகளை விற்பனை செய்யக்கூடும். அப்படி நடந்தால் சந்தையில் சப்ளை அதிகரித்து விலை மேலும் குறைய வாய்ப்பு உள்ளது.

55
சர்வதேச தங்க விலை

சந்தை நிபுணர்கள் கூறுவதாவது, 2027 இறுதிக்குள் இந்தியாவில் தங்கம் ரூ.1 லட்சத்திற்கு கீழ் வரக்கூடும். சர்வதேச அளவில் ஒரு அவுன்ஸ் $3,000 வரை குறையலாம் என கணிப்பு. தற்போது தங்கத்தை பாதுகாப்பான முதலீடாக கருதுவது சற்று அபாயகரமானது என்றும், நீண்டகால அரசுப் பத்திரங்கள் மாற்ற வாய்ப்பாக இருக்கலாம் என்றும் ஆலோசனை வழங்கப்படுகிறது.

வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.

Read more Photos on
click me!

Recommended Stories