ரூ.18,000 சம்பளம் ரூ.58,500 ஆகுமா.? மத்திய அரசு ஊழியர்களுக்கு காத்திருக்கும் சம்பள உயர்வு!

Published : Feb 19, 2026, 08:50 AM IST

அரசு ஊழியர்கள் 8வது ஊதியக் குழுவின் பரிந்துரைகளை ஆவலுடன் எதிர்நோக்கி வருகின்றனர், இதில் ஃபிட்மென்ட் ஃபேக்டர் முக்கிய விவாதப் பொருளாக உள்ளது. இதனால் அடிப்படை சம்பளம் ரூ.18,000-லிருந்து ரூ.58,500 ஆக உயர வாய்ப்புள்ளது.

PREV
15
8வது ஊதியக் குழு முக்கிய அப்டேட்

அரசு ஊழியர்கள் 8வது ஊதியக் குழுவின் பரிந்துரைகளை ஆவலுடன் எதிர்நோக்கி வருகின்றனர். இந்த பரிந்துரைகள் அமலுக்கு வர இன்னும் 18-20 மாதங்கள் ஆகலாம் என்றாலும், “ஃபிட்மென்ட் ஃபேக்டர்” குறித்த விவாதம் தற்போது அதிகரித்துள்ளது.

25
ஃபிட்மென்ட் ஃபேக்டர்

7வது ஊதியக் குழுவில் 2.57 என்ற ஃபிட்மென்ட் ஃபேக்டர் பயன்படுத்தப்பட்டதால் குறைந்தபட்ச அடிப்படை சம்பளம் ரூ.7,000 முதல் ரூ.18,000 ஆக உயர்ந்தது. தற்போது ஊழியர் சங்கங்கள் 2.86 முதல் 3.25 வரை ஃபிட்மென்ட் ஃபேக்டர் நிர்ணயிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

35
ஊதிய உயர்வு குறித்த புதிய தகவல்

3.25 என்ற அதிகபட்ச ஃபிட்மென்ட் ஃபேக்டர் ஏற்கப்பட்டால், தற்போதைய ரூ.18,000 அடிப்படை சம்பளம் ரூ.58,500 ஆக உயரலாம் என கணக்கிடப்படுகிறது. அதிகரித்து வரும் பணவீக்கம் மற்றும் வாழ்க்கைச் செலவைக் கருத்தில் கொண்டு உயர வேண்டும் என ஊழியர்கள் வலியுறுத்துகின்றனர்.

45
ஓய்வூதியம் உள்ளிட்ட கோரிக்கைகள்

பிப்ரவரி 25, 2026 அன்று NC-JCM வரைவு குழு கூட்டம் நடைபெற உள்ளது. இதில் ஊதியம், HRA, DA, ஓய்வூதியம் உள்ளிட்ட கோரிக்கைகள் பரிசீலிக்கப்பட்டுள்ளன.

55
மத்திய அரசு ஊழியர்கள்

8வது ஊதியக் குழு பரிந்துரைகள் ஜனவரி 1, 2026 முதல் அமலுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதிகாரப்பூர்வ இணையதளம் தொடங்கப்பட்டுள்ளதால், பொதுமக்கள் கருத்துகளையும் அரசு வரவேற்கிறது.

வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.

Read more Photos on
click me!

Recommended Stories