விலை உயர்வு உங்கள் பாக்கெட்டைப் பதம் பார்ப்பதற்குள் நீங்கள் ஸ்மார்ட்டாகச் செயல்பட சில வழிகள்!
முன்கூட்டியே வாங்குங்கள்
மார்ச் மாத இறுதியில் டிமாண்ட் அதிகரிக்கும் போது நிறுவனங்கள் விலையை உயர்த்தும். எனவே, பிப்ரவரி அல்லது மார்ச் முதல் வாரத்திற்குள் வாங்குவது ரூ.3,000 முதல் ரூ.7,000 வரை உங்களுக்கு மிச்சப்படுத்தும்.
பழைய ஸ்டாக்
புதிய ஸ்டார் ரேட்டிங் கொண்ட ஏசிகள் வருவதற்கு முன், கடைகளில் உள்ள பழைய ஸ்டாக் ஏசிகளுக்குக் கூடுதல் தள்ளுபடி கிடைக்க வாய்ப்புள்ளது. அவற்றைத் தேடிப் பிடியுங்கள்.
கார்டு ஆஃபர்கள்
கோடைக்கால விற்பனைக்காக வங்கிகள் வழங்கும் 'கேஷ்பேக்' மற்றும் 'நோ காஸ்ட் இஎம்ஐ' வசதிகளைப் பயன்படுத்தி விலையேற்றத்தின் சுமையைக் குறைக்கலாம்.