Bigg Boss 10 : பிக் பாஸ் வீட்டில் யாரும் எதிர்பாராத எவிக்‌ஷன்... இந்த வாரம் அதிரடியாக வெளியேற்றப்பட்டது இவரா?

Published : Sep 24, 2026, 06:48 PM IST

Bigg Boss Tamil Season 10 Eviction : பிக் பாஸ் தமிழ் சீசன் 10 நிகழ்ச்சியில் இந்த வாரம் போட்டியாளர்கள் அளித்த வாக்குகள் அடிப்படையில் ஒருவர் எலிமினேட் செய்யப்பட்டு உள்ளார்.

PREV
14
Bigg Boss Tamil Season 10 Eviction

பிக் பாஸ் தமிழ் சீசன் 10 நிகழ்ச்சி கடந்த செப்டம்பர் 6ஆம் தேதி விறுவிறுப்பாக தொடங்கினாலும் முந்தைய சீசன் போல் சர்ச்சைகள் எதுவும் இன்றி மந்தமாக சென்று கொண்டிருக்கிறது. இதுவரை நடந்து முடிந்த 9 சீசன்களிலும் மக்கள் அளிக்கும் வாக்குகளின் அடிப்படையில் தான் எவிக்சன் நடைபெறும். ஆனால் இந்த சீசனில் புது முயற்சியாக ஒவ்வொரு வாரமும் நடத்தப்பட்டு வருகிறது. அதில் ஒரு எவிக்‌ஷன் மக்கள் அளிக்கும் வாக்குகள் அடிப்படையில் நடைபெறுகிறது. மற்றொரு எவிக்‌ஷன் உள்ளிருக்கும் போட்டியாளர்கள் போடும் வாக்குகள் அடிப்படையில் நடக்கிறது.

Bigg Boss : ஆளவிடுங்கடா சாமி... கதவை திறக்கச் சொல்லி கதறி அழுத ஆனந்தி... பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறினாரா?

24
பிக் பாஸில் நடக்கும் டபுள் எவிக்‌ஷன்

ஒவ்வொரு வாரமும் டாஸ்க் சரிவர பர்ஃபார்ம் செய்யாத போட்டியாளர்கள் மூவரை கேப்டன் தேர்வு செய்வார். அவர்களிலிருந்து யார் வீட்டை விட்டு வெளியேற வேண்டும் என சக போட்டியாளர்கள் ஒவ்வொருவராக வாக்களிப்பார்கள். அதில் அதிக வாக்குகளை பெறும் போட்டியாளர் வெளியேற்றப்படுவார். அந்த வகையில் இதுவரை உள்ளே இருக்கும் போட்டியாளர்களால் இருவர் வெளியேற்றப்பட்டு இருக்கிறார்கள். முதல் வாரம் சாவின்யா வேலுவும், இரண்டாவது வாரம் ஜாவித்தும் அவ்வாறு வெளியேற்றப்பட்டனர்.

Bigg Boss : ஷமாவின் கேப்டன் பதவி பறிபோகிறதா? பிக் பாஸ் டெமாகிரசி ரூமில் நடந்த எதிர்பாரா ட்விஸ்ட்

34
இந்த வாரம் சிக்கியது யார்?

அந்த வகையில் மூன்றாவது வாரம் உள்ளே இருக்கும் போட்டியாளர்களால் வெளியேற்றப்பட்ட நபர் யார் என்கிற தகவல் இணையத்தில் கசிந்துள்ளது. அதன்படி இந்த சீசனில் பைனல் வரை செல்வார் என எதிர்பார்க்கப்பட்ட லட்சுமி பிரியா தான் இந்த வாரம் வெளியேற்றப்பட்டுள்ளார். டாப் 5 ஃபைனலிஸ்ட்களில் ஒருவராக லட்சுமி பிரியா இருப்பார் என ரசிகர்கள் ஆவலோடு எதிர்பார்த்து இருந்த நிலையில் இப்படி சகப் போட்டியாளர்களால் எலிமினேட் செய்யப்பட்டுள்ளது பார்த்து இது நியாயமில்லாத எவிக்‌ஷன் என ஆதங்கத்தை கொட்டி வருகின்றனர்.

44
ரசிகர்கள் அதிர்ச்சி

இந்த வாரம் பிக் பாஸ் வீட்டின் கேப்டனாக உள்ள அவினாஷ் தேர்வு செய்த மூவர் பட்டியலில் முனியம்மாள், லட்சுமி பிரியா, ஆனந்தி ஆகிய மூவர் இடம் பெற்றிருந்தனர். இதிலிருந்து ஆனந்தியை தான் அனைவரும் ஓட்டு போட்டு எலிமினேட் செய்வார்கள் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் கடைசி நேரத்தில் லட்சுமி பிரியா எலிமினேட் செய்யப்பட்டிருக்கிறார். இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பான மகாநதி சீரியலில் நாயகியாக நடித்ததன் மூலம் பட்டிதொட்டி எங்கும் பிரபலமாக இருந்தார். அவரின் பிக் பாஸ் கனவு இப்படி ஒரு ஷாக்கிங் எவிக்‌ஷன் மூலம் முடிவுக்கு வந்துள்ளது அவரது ரசிகர்களுக்கு மிகப்பெரிய ஏமாற்றமாக அமைந்துள்ளது.

Bigg Boss : “சிம்ப்ளி வேஸ்ட்”... பிக்பாஸ் வீட்டில் சாந்தினியை கதறி அழவைத்த டாஸ்க்!

Read more Photos on
click me!

Recommended Stories