Bigg Boss : “சிம்ப்ளி வேஸ்ட்”... பிக்பாஸ் வீட்டில் சாந்தினியை கதறி அழவைத்த டாஸ்க்!

Published : Sep 22, 2026, 09:35 PM IST

Bigg Boss Tamil Season 10 : பிக் பாஸ் தமிழ் சீசன் 10 நிகழ்ச்சியில் இன்று நடைபெற்ற டாஸ்கின்போது சாந்தினி கதறி அழுதுள்ளார். அவர் எதற்காக அழுதார் என்பதை பற்றி பார்க்கலாம்.

PREV
14
Bigg Boss Tamil Season 10

பிக்பாஸ் தமிழ் சீசன் 10 நிகழ்ச்சி இரண்டு வாரங்களை நிறைவு செய்து, தற்போது மூன்றாவது வாரத்தில் பரபரப்பாக சென்று கொண்டிருக்கிறது. 19 போட்டியாளர்களுடன் தொடங்கிய இந்த சீசனில், முதல் வாரத்திலேயே இரண்டு போட்டியாளர்கள் வெளியேறினர். அதன்பின்னர் இரண்டு வைல்ட்கார்டு போட்டியாளர்கள் அடுத்தடுத்து வீட்டிற்குள் என்ட்ரி கொடுத்ததால், மீண்டும் போட்டியாளர்களின் எண்ணிக்கை 19-ஆக அதிகரித்தது. இதையடுத்து இரண்டாவது வாரத்தில் ஒரு போட்டியாளர் வீட்டில் இருந்து வெளியேற்றப்பட்டதுடன், மக்கள் வாக்கெடுப்பில் குறைவான வாக்குகளைப் பெற்ற மற்றொரு போட்டியாளரும் எலிமினேட் செய்யப்பட்டார்.

Bigg Boss 10 : அன்சரின் அடாவடியால் அப்செட் ஆன ஷாதிகா... சாப்பிடாமல் தர்ணாவில் ஈடுபட்டதால் பரபரப்பு

24
பிக் பாஸில் இந்த வாரம்

இதனால் தற்போது பிக்பாஸ் தமிழ் சீசன் 10 வீட்டில் 17 போட்டியாளர்கள் மட்டுமே உள்ளனர். இந்நிலையில், மூன்றாவது வாரத்திற்கான கேப்டனாக அவினாஷ் தேர்வு செய்யப்பட்டுள்ளார். இதன் காரணமாக இந்த வாரம் போட்டியாளர்களுக்கு இடையேயான போட்டியும் மோதலும் அதிகரித்துள்ளது. நேற்றைய எபிசோடு பெரும்பாலும் வீட்டின் புதிய தலைவரை தேர்வு செய்வது மற்றும் போட்டியாளர்களை வெவ்வேறு அணிகளாக பிரிப்பது தொடர்பான நிகழ்வுகளிலேயே நகர்ந்தது. இதைத்தொடர்ந்து, இன்று பிக்பாஸ் கொடுத்துள்ள புதிய டாஸ்க் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.

34
வைரலாகும் புரோமோ

குறிப்பாக, ஒவ்வொரு புரோமோ வெளியாகும் போதும் டாஸ்க் குறித்த அடுத்தடுத்த தகவல்கள் தெரியவருவதால் எதிர்பார்ப்பும் அதிகரித்து வருகிறது. அந்த வகையில், பிக்பாஸ் தமிழ் சீசன் 10-ன் 16-வது நாளுக்கான மூன்றாவது புரோமோ தற்போது வெளியாகியுள்ளது. இதில் போட்டியாளர்களுக்கு வித்தியாசமான டாஸ்க் ஒன்று வழங்கப்படுகிறது. வீட்டில் இருக்கும் சில போட்டியாளர்களுக்கு குறிப்பிட்ட பெயர் அல்லது டேக் கொடுக்கப்பட்டு, அந்த டேக் யாருக்கு பொருத்தமாக இருக்கும் என்பதை மற்ற போட்டியாளர்கள் தேர்வு செய்ய வேண்டும்.

44
உடைந்து அழுத சாந்தினி

அதில் ‘டிராமா குயின்’, ‘சிம்ப்ளி வேஸ்ட்’, ‘மிக்சர் மாமா’ உள்ளிட்ட டேக்குகள் இடம்பெறுகின்றன. ஒவ்வொரு டேக்கும் யாருக்கு பொருந்தும் என்று போட்டியாளர்கள் தங்களது கருத்துகளை தெரிவிக்கின்றனர். இந்த டாஸ்கில் ‘சிம்ப்ளி வேஸ்ட்’ என்ற டேக் சாந்தினிக்கு வழங்கப்படுகிறது. இதனை எதிர்பார்க்காத சாந்தினி, அந்த வார்த்தையால் மனமுடைந்து கண்ணீர் விட்டு அழுகிறார். அவருடைய உணர்ச்சிப்பூர்வமான இந்த காட்சிகள் தற்போது வெளியாகியுள்ள புரோமோவில் இடம்பெற்றுள்ளன.

சாந்தினி அழும் காட்சிகள் பிக்பாஸ் ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்துள்ள நிலையில், அவருக்கு அந்த டேக்கை கொடுத்தது யார், அதற்கான காரணம் என்ன, இதனால் வீட்டிற்குள் ஏதேனும் மோதல் ஏற்படுமா என்ற எதிர்பார்ப்பும் அதிகரித்துள்ளது. இந்த புரோமோ வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் பேசுபொருளாகி வருகிறது.

Bigg Boss double eviction: ஒரே வாரத்தில் டபுள் எவிக்ஷன்..ஜாவித்தை தொடர்ந்து இன்று யார் வெளியேறுகிறார்?

Read more Photos on
click me!

Recommended Stories