Bigg Boss : ஆளவிடுங்கடா சாமி... கதவை திறக்கச் சொல்லி கதறி அழுத ஆனந்தி... பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறினாரா?

Published : Sep 23, 2026, 04:52 PM IST

Bigg Boss Tamil Season 10 : பிக் பாஸ் தமிழ் சீசன் 10 நிகழ்ச்சியில் வைல்டு கார்டு எண்ட்ரியாக வந்த ஆனந்தி, தன்னை தயவு செய்து வெளியே அனுப்பிவிடுமாறு பிக் பாஸிடம் கதறி உள்ளார்.

PREV
14
Bigg Boss Tamil Season 10

தமிழ் சின்னத்திரையில் ரசிகர்கள் மத்தியில் தொடர்ந்து கவனம் பெற்று வரும் நிகழ்ச்சிகளில் ஒன்றாக பிக்பாஸ் தமிழ் இருந்து வருகிறது. இதுவரை 9 சீசன்கள் நிறைவடைந்த நிலையில், பிக்பாஸ் தமிழ் சீசன் 10 நிகழ்ச்சி கடந்த செப்டம்பர் 6, 2026 அன்று பிரம்மாண்டமாக தொடங்கியது. இந்த சீசனில் பிரபலங்கள் மற்றும் பொதுமக்கள் என மொத்தம் 19 போட்டியாளர்கள் ஆரம்பத்தில் களமிறங்கினர். இதனைத் தொடர்ந்து இரண்டு வைல்ட்கார்டு போட்டியாளர்களும் பிக்பாஸ் வீட்டிற்குள் நுழைந்தனர்.

நிகழ்ச்சி தொடங்கிய முதல் நாளிலிருந்தே போட்டியாளர்களுக்கு இடையே கருத்து வேறுபாடுகள், மோதல்கள் மற்றும் பல்வேறு சர்ச்சைகள் தொடர்ந்து வருகின்றன. முந்தைய சீசன்களைப் போல இந்த முறை போட்டியாளர்களுக்குள் பெரிய அளவில் ஒற்றுமை ஏற்படவில்லை. ஒவ்வொருவரும் தங்களது தனிப்பட்ட விளையாட்டில் கவனம் செலுத்தி வருவதாகவே நிகழ்ச்சியின் காட்சிகள் காட்டுகின்றன.

Bigg Boss : “சிம்ப்ளி வேஸ்ட்”... பிக்பாஸ் வீட்டில் சாந்தினியை கதறி அழவைத்த டாஸ்க்!

24
நாமினேஷனில் 10 பேர் சொன்ன ஒரே பெயர்!

இந்நிலையில், வைல்ட்கார்டு போட்டியாளராக பிக்பாஸ் வீட்டிற்குள் நுழைந்த ஆனந்தி, கடந்த சில நாட்களாக போட்டியாளர்களிடம் இருந்து எதிர்மறையான கருத்துகளை எதிர்கொண்டு வருவதாக கூறப்படுகிறது. இந்த வாரத்திற்கான நாமினேஷன் நடைபெற்றபோது, வீட்டில் இருந்த 10 போட்டியாளர்கள் ஆனந்தியின் பெயரை எவிக்‌ஷனுக்காக குறிப்பிட்டுள்ளனர். ஒரே வாரத்தில் இத்தனை பேர் தனது பெயரை கூறியது ஆனந்தியை பெரிதும் பாதித்ததாக தெரிகிறது. இதன் தொடர்ச்சியாக நடைபெற்ற டாஸ்க் ஒன்றிலும், பிக்பாஸ் வீட்டின் 'ட்ராமா குயின்' என்ற பட்டம் தொடர்பாக ஆனந்தி கண்ணீர் விட்டு அழுதார். இதனால் அவர் மனதளவில் மிகவும் வருத்தத்தில் இருப்பது தெரியவந்தது.

34
வீட்டை விட்டு வெளியேறுவதாக கூறிய ஆனந்தி!

இதற்கிடையே, பிக்பாஸ் வீட்டின் லீடரான அவினாஷ், எவிக்‌ஷன் பிராசஸுக்காக ஆனந்தி, முனியம்மா மற்றும் முகேஷ் ஆகிய மூன்று பேரை தேர்வு செய்துள்ளார். இதனால் மேலும் மனமுடைந்த ஆனந்தி, பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேற வேண்டும் என்ற முடிவுக்கு வந்ததாக தெரிகிறது. வீட்டின் கதவு அருகே சென்ற அவர், தன்னை வெளியே அனுப்புமாறு பிக்பாஸிடம் கோரிக்கை வைத்துள்ளார். ஆனந்தி கதவு அருகே நின்று வெளியேற வேண்டும் எனக் கேட்கும் காட்சிகள் தற்போது வெளியாகி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றன.

44
ஆனந்தியின் அதிர்ச்சி முடிவு

இந்த சம்பவம் பிக்பாஸ் ரசிகர்கள் மத்தியில் பல்வேறு விவாதங்களை ஏற்படுத்தியுள்ளது. தொடர்ந்து நாமினேஷனில் இடம்பெறுவது மற்றும் வீட்டில் இருந்து கிடைக்கும் எதிர்மறையான கருத்துகள் காரணமாக ஆனந்தி இந்த முடிவை எடுத்தாரா அல்லது இது நிகழ்ச்சியின் அடுத்தகட்ட திருப்பமாக மாறுமா என்பது வரும் எபிசோடுகளில் தெரியவரும். ஆனந்தி பிக் பாஸ் வீட்டுக்குள் வைல்டு கார்டு எண்ட்ரியாக வந்தபோது, செம டஃப் கொடுப்பார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அவரின் இந்த முடிவு பிக் பாஸ் ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது.

Bigg Boss 10 : அன்சரின் அடாவடியால் அப்செட் ஆன ஷாதிகா... சாப்பிடாமல் தர்ணாவில் ஈடுபட்டதால் பரபரப்பு

Read more Photos on
click me!

Recommended Stories