முன்னதாக இவர் நிகழ்ச்சியில், சமந்தா, அக்ஷய் குமார், விஜய் தேவரகொண்டா உள்ளிட்டோர் கலந்துகொண்டு தங்களது அந்தரங்க வாழ்க்கை குறித்து பேசி இருந்தது மிகப்பெரிய சர்ச்சையை கிளப்பியிருந்தது. எந்த கேள்விகளுக்கும் அஞ்சாத கரண் ஜோஹர் பிக் பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்க இருப்பது பெரும் எதிர்பார்ப்பை கிளப்பியுள்ளது. கலர்ஸ் டிவி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இதற்கான ப்ரோமோவை வெளியிட்டுள்ளனர்.