என் மகளே என்னை அங்கிள்னு கூப்பிட்டா... முதல் மனைவியுடனான பிரிவு குறித்து பேசி கண்கலங்கிய ராபர்ட் மாஸ்டர்

Published : Oct 20, 2022, 04:03 PM IST

பிரபல நடன இயக்குனரான ராபர்ட் மாஸ்டர் தான் தனது முதல் மனைவியை பிரிந்தது ஏன் என்பது பற்றி பிக்பாஸ் நிகழ்ச்சியில் உருக்கமாக பேசி உள்ளார்.

PREV
12
என் மகளே என்னை அங்கிள்னு கூப்பிட்டா... முதல் மனைவியுடனான பிரிவு குறித்து பேசி கண்கலங்கிய ராபர்ட் மாஸ்டர்

பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்துகொண்டுள்ள ராபர்ட் மாஸ்டர் தனது முதல் மனைவி குறித்து தனது மகள் குறித்தும் உருக்கமாக பேசி உள்ளார். அவர் கூறியதாவது : “எனது அம்மா, அப்பா இருவருமே டான்ஸ் மாஸ்டர்கள் தான். வீட்டில் கடைசி பையன் என்பதால் பெற்றோருக்கு என் மீது அதிகம் பாசம். ஆனால் சின்ன வயசுலயே எனக்கு போலியோ பாதிப்பு ஏற்பட்டதால் எனக்கு கால் சரியாக வரவில்லை. 

அதன் பின் எனது தந்தையின் முயற்சியால் தான் நான் அதிலிருந்து குணமாகி, நடனத்திற்குள்ளேயே வந்தேன். அதன்பின் என் வாழ்க்கையில் காதல் வந்தது. அந்த பெண்ணின் பெயரை சொல்ல விரும்பவில்லை. காதலிச்சு அவரை கல்யாணமும் பண்ணிக்கிட்டேன். எங்களுக்கும் ஒரு அழகான பெண் குழந்தையும் பிறந்துச்சு. ஆனா குழந்தை பிறந்ததுமே நாங்க பிரிஞ்சிட்டோம், ஏன் அந்த முடிவெடுத்தோம்னு எனக்கு தெரியல. நான் சுத்தமாக படிக்காதவன், எனக்கு அறிவில்லனு சொன்னா

இதையும் படியுங்கள்... கோப்ரா கற்றுத்தந்த பாடம்... 12 நிமிட சீனுக்கு கத்திரி போட்ட படக்குழு - ரிலீசுக்கு முன்பே உஷாரான பிரின்ஸ்

22

என்னுடைய மகளுக்கு நான் தான் அப்பானு தெரியுமா? தெரியதானு கூட எனக்கு தெரில. என்னைவிட்டு பிரிந்ததும் என் முதல் மனைவி இன்னொரு திருமணம் செஞ்சிக்கிட்டாங்க. ஆனா என் மகளுக்கு நான் தான் அப்பானு நான் இறந்ததுக்கு அப்புறமாவது சொல்லுங்கனு எமோஷனலாக பேசி கண்கலங்கினார்.

தொடர்ந்து பேசிய அவர் "இந்த நிகழ்ச்சியை அவரும் பார்ப்பா, என்னப்பற்றி தெரிந்துகொள்வாள் என்பதற்காக தான் நான் இந்த ஷோவுக்கே வந்தேன். 2 வயசு வரை என் குழந்தையை பார்த்திருக்கிறேன். அததுக்கப்புறம் 7 வயதில் ஒருமுறை பைக்ல கூட்டி வந்தார் என்னுடைய முதல் மனைவி. அப்போ அவளுக்கு என்னை அடையாளம் தெரியல. அவ அம்மா என்னை பார்த்து 'அங்கிளுக்கு ஹாய் சொல்லு'னு சொல்ல, என் மகளும் என்னை அங்கிள்னு கூப்பிட்டாள். அது மிகப்பெரிய வலியை ஏற்படுத்தியதாக ராபர்ட் மாஸ்டர் கூறினார்.

இதையும் படியுங்கள்...   அவனையே நான் பப்லிசிட்டிக்காக யூஸ் தான்பண்ணுனேன்... பிக்பாஸ் ராபர்ட் மாஸ்டர் பற்றி புட்டு புட்டு வைத்த வனிதா!

click me!

Recommended Stories