கணீர் குரலோடு ஹவுஸ்மேட்ஸுக்கு கட்டளையிடுவதாகட்டும், சட்டென ஜாலி மூடுக்கு மாறி போட்டியாளர்களை கலாய்ப்பதாகட்டும் மற்ற மொழிகளைக் காட்டிலும் தனித்து விளங்குகிறார் தமிழ் பிக்பாஸ். சரி இந்த குரலுக்கு யார் சொந்தக்காரர் என்பது இதுவரை அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படாவிட்டாலும், நம் நெட்டிசன்கள் அது சாஷோ என்பவர் தான் என்பதை எப்படியோ தேடி கண்டுபிடித்து விட்டனர்.