Biggboss Tamil: பிக்பாஸ் வீட்டில் திடீர் என மயங்கி விழுந்த போட்டியாளர்..! என்ன ஆச்சு?

Published : Oct 18, 2022, 01:06 PM ISTUpdated : Oct 18, 2022, 06:48 PM IST

பிக்பாஸ் வீட்டில் நேற்று நடைபெற்ற போட்டியில், முக்கிய போட்டியாளர் ஒருவர் மயங்கி விழுந்தது பரபரப்பை ஏற்படுத்தியது.  

PREV
16
Biggboss Tamil:  பிக்பாஸ் வீட்டில் திடீர் என மயங்கி விழுந்த போட்டியாளர்..! என்ன ஆச்சு?

பிக்பாஸ் வீட்டில் முதல் வாரம், தலைவரே இல்லாமல் நிகழ்ச்சி சென்ற நிலையில், நேற்றைய தினம் தான் முதல் தலைவருக்கான போட்டி மிகவும் வித்தியாசமான முறையில் நடந்தது.
 

26

கார்டன் ஏரியாவில் கடிகாரம் வடிவில் வைக்கப்பட்டிருந்த சக்கரத்தில், கை கால்களை வைத்து பிடித்து கொண்டு தலைவர் போட்டிக்கு போட்டியிடும் போட்டியாளர்கள் நிற்க வேண்டும். அந்த சக்கரம் போட்டியாளர்களின் அசைவை பொறுத்து அசையும் தன்மை கொண்டது.

மேலும் செய்திகள்: மாமனார் வீட்டில் தளபதிக்கு காத்திருக்கும் பஞ்சாயத்து..? பழைய பிரச்சனை தீர்வுக்கு வருமா..
 

36

முதல் தலைவருக்கான போட்டியில், ஜிபி முத்து, சாந்தி, மற்றும் ஜனனி ஆகியோர் கலந்து கொண்டனர். போட்டி துவங்கிய சில மணி நேரத்திலேயே சாந்தி சக்கரத்தை விட்டு கீழே இறங்கியதால் போட்டியில் இருந்து விலக்கப்பட்டார்.

46

ஜிபி முத்து மற்றும் ஜனனிக்கு இடையே கடும் போட்டி நிலவியது.  இவர்கள் இருவரும் அதிக மணிநேரம் நின்று கொண்டு விளையாடிய நிலையில் ஜனனி சக்கரம் சுழன்று கீழே விழுந்தார். விழுந்த உடனே திடீர் என மயக்கம் போட்டார். பின்னர் அவரை மற்ற போட்டியாளர்கள் பத்திரமாக வீட்டிற்குள் தூக்கி சென்று தண்ணீர் கொடுத்து தேற்றினர்.

மேலும் செய்திகள்: Ponniyin Selvan Collection: தமிழில் 'பொன்னியின் செல்வன்' செய்த மாஸ் சாதனை.! வசூலில் '2.ஓ'வை தட்டி தூக்குமா.?
 

56

இதனால் ஜிபி முத்து வெற்றியாளர் என அறிவிக்கப்பட்டார். இவர் சுமார் 1 மணிநேரம், 48 நிமிடம் 59 நொடிகள் அந்த கடிகாரத்தில் நின்றதாக பிக்பாஸ் கூறியதோடு, முத்துவை முதல் வார தலைவராகவும் அறிவித்தார்.

66

எனினும் கடிகாரத்தில் இருந்து கீழே விழும் போது தெளிவாக இருந்த ஜனனி, மயக்கம் போட்டது உண்மையானது போல் தெரியவில்லை என்றும் சிலர் விமர்சனம் செய்து வருகிறார்கள். காரணம் எழும் போது அப்படி ஒரு புன்னகையோடு எழுந்தார். எனவே இது கன்டென்ட் கொடுப்பதற்காக செய்த செயல் என்றே நினைக்க தோன்றுகிறது.

மேலும் செய்திகள்: விஜே சித்ரா மரண வழக்கில் ‘அந்த’ விஜய் டிவி பிரபலத்துக்கு தொடர்பு இருக்கு... புது குண்டை தூக்கிப்போட்ட ஹேமந்த்
 

Read more Photos on
click me!

Recommended Stories