bigg boss tamil 6 : பிக்பாஸ் சீசன் 6-ல் ஒரே வாரத்தில் மக்கள் மனதை வென்ற டாப் 5 போட்டியாளர்கள் லிஸ்ட் இதோ

First Published | Oct 18, 2022, 12:40 PM IST

கமலஹாசன் தொகுத்து வழங்கும் பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியில் முதல் வாரத்தில் மனதை வென்ற பிரபலங்கள் குறித்து பார்க்கலாம்.

தென்னிந்திய மொழிகளில் பிரபலமாக ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் ரியாலிட்டி ஷோ தற்போது தமிழில் 6 வது சீசன் ஒளிபரப்பாகி வருகிறது.  20 போட்டியாளர்களுடன் அட்டகாசமாக துவங்கி ஒரு வாரத்தை கடந்துள்ளது பிக் பாஸ் சீசன் 6. முதல் வாரம் என்பதால் எந்த போட்டியாளரும் எலிமினேசன் செய்யப்படவில்லை. அதோடு 21வது ஆளாக விஜய் டிவி பிரபலமான மைனா நந்தினி உள் நுழைந்துள்ளார். இந்த வார தலைவராக ஜி பி முத்து தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இந்த நிலைகள் கமலஹாசன் தொகுத்து வழங்கும் பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியில் முதல் வாரத்தில் மனதை வென்ற பிரபலங்கள் குறித்து பார்க்கலாம்.

ஜிபி முத்து :


பொதுவாக பிக் பாஸ் நிகழ்ச்சியில் சின்னத்திரை வெள்ளித்திரை மற்றும் சமூக ஊடகங்களில் பிரபலமாக இருப்பவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். அந்த வகையில் இந்த முறை டிக் டாக் மூலம் பிரபலமான தூத்துக்குடியை சேர்ந்த ஜிபி முத்து உள்ளார். இவருக்கென்று தனி பாலோவர்ஸ் உண்டு.  தனது தூத்துக்குடி ஸ்லாங்கில் அனைவரையும் கவர்ந்திழுத்தார் முத்து.  பலருக்கும் பிடித்துப் போக தற்போது பிக் பாஸ் வீட்டில் கலக்கி வருகிறார்.

மேலும் செய்திகளுக்கு...Happy Birthday Jyothika : ஜோதிகாவின் பிறந்த நாள் சிறப்பாக...சில தகவல்கள் இதோ 

Tap to resize

ரட்சிதா மகாலட்சுமி : 

விஜய் டிவிகள் பிரபலமாக ஒளிபரப்பான சரவணன் மீனாட்சி தொடர் மூலம் பிரபலமானவர். ரட்சிதா மகாலட்சுமி. இவர் பிக் பாஸ் சீசன் 6ல் இடம் பெற்றுள்ளார். வசீகரமான முகத்தை கொண்ட இவருக்கும் அதிக ரசிகர்கள் உண்டு  இது மேலும் ரசிகர்களை அதிகப்படுத்தி உள்ளது என்று கூறலாம். ஜனனி மீது இவர் காட்டும் அன்பும், இவரின் அடக்கமும் ரசிகர்களை கவர்ந்துள்ளது.

ஆயிஷா :

ஜீ தமிழில் ஒளிபரப்பான சத்யா என்கிற சீரியல் மூலம் பட்டி தொட்டி எல்லாம் பிரபலமானவர் ஆயிஷா.  ஆண் போன்ற உடையுடன், மிடுக்கான தோரணையும் கொண்டு அந்த சீரியல் மூலம் பல ரசிகர்களை பெற்றவர். தற்போது பிக் பாஸ் சீசன் 6ல் இடம் பெற்றுள்ளார். அந்த சீரியலுக்கும் இவரது உண்மையான குணத்திற்கும் சம்பந்தமே இல்லை என்பது போல பிக்பாஸ் 6ல் இவர் நடந்து கொள்வது ரசிகர்களை ஆச்சரியப்படுத்தியுள்ளது.

மேலும் செய்திகளுக்கு...அய்யய்யோ இந்த டாஸ்க்கா... அப்போ இந்த வாரம் பிக்பாஸ் வீடே கண்ணீர் கடல்ல மிதக்கப்போகுது..! புரோமோ இதோ 

ஜனனி : 

இலங்கை தமிழரான ஜனனி அங்கு தொலைக்காட்சிகளில் செய்தி வாசிப்பாளராக இருந்தவர். லாஸ்லயாவை தொடர்ந்து இரண்டாவது இலங்கை தமிழராக இவர் பிக் பாஸ் சீசனில் பங்கேற்றுள்ளார். குழந்தை போன்ற முகத்துடனும் செல்லமான பேச்சுடனும் அங்கு உள்ளவர்களை மட்டுமல்லாமல் ரசிகர்களையும் ஈர்த்து வருகிறார் ஜனனி.

அமுதவாணன் :


விஜய் டிவியின் மற்றொரு பிரபலமான  அமுதவாணன்.  தொலைக்காட்சி ரியாலிட்டி ஷோக்கலில் அதிகம் பங்கேற்ற காமெடி நடிகரான இவர், பிக் பாஸ் ஷோவிலும் தனது தனி திறமையால் ரசிகர்களை உற்சாகப்படுத்தி வருகிறார்.

Latest Videos

click me!