தப்பித்த தனலட்சுமி... டேஞ்ஜர் ஜோனில் சிக்கிய 3 பேர் - பிக்பாஸில் இந்த வாரம் எலிமினேட் ஆகப்போவது இவரா?

Published : Oct 20, 2022, 10:42 AM IST

பிக்பாஸ் நிகழ்ச்சியின் 6-வது சீசனில் பங்கேற்றுள்ள 21 போட்டியாளர்களில் முதல் நபராக எலிமினேட் ஆகப்போவது யார் என்பது குறித்த தகவல் வெளியாகி உள்ளது.

PREV
14
தப்பித்த தனலட்சுமி... டேஞ்ஜர் ஜோனில் சிக்கிய 3 பேர் - பிக்பாஸில் இந்த வாரம் எலிமினேட் ஆகப்போவது இவரா?

பிக்பாஸ் நிகழ்ச்சியின் 6-வது சீசன் கடந்த அக்டோபர் 9-ந் தேதி தொடங்கியது. 20 போட்டியாளர்களுடன் கோலாகலமாக ஆரம்பமான இந்நிகழ்ச்சியில் கடந்த வாரம் 21-வது போடியாளராக மைனா நந்தினி எண்ட்ரி கொடுத்தார். பிக்பாஸ் நிகழ்ச்சியில் வார வாரம் ஒருவர் எலிமினேட் செய்யப்படுவது வழக்கம். முதல் வாரம் என்பதால் கடந்த ஞாயிறன்று யாரும் எலிமினேட் செய்யப்படவில்லை.

24

பிக்பாஸ் வீட்டில் உள்ள போட்டியாளர்களால் நாமினேட் செய்யப்படுபவர்கள் அனைவருக்கும் மக்கள் ஹாட்ஸ்டார் மூலம் வாக்குகளை அளிக்க முடியும். இதில் யார் குறைவான வாக்குகளை பெற்றுள்ளாரோ அவர் எலிமினேட் செய்யப்படுவார். அந்த வகையில் இந்த பிக்பாஸ் 6 நிகழ்ச்சியின் முதல் எலிமினேஷன் இந்த வாரம் தான் நடக்க இருக்கிறது.

இதையும் படியுங்கள்... Biggboss Tamil: பிக்பாஸ் வீட்டில் திடீர் என மயங்கி விழுந்த போட்டியாளர்..! என்ன ஆச்சு?

34

இதில் 10-க்கும் மேற்பட்ட போட்டியாளர்கள் நாமினேட் ஆகி உள்ளனர். அவர்களில் தனலட்சுமி, நிவாஷினி, ஷெரினா, சாந்தி ஆகியோர் தான் டேஞ்ஜர் ஜோனில் இருந்து வந்தனர். நேற்று இரவு அசல் கோளாருடன் ஏற்பட்ட சண்டையால் தனலட்சுமிக்கு அதிக அளவிலான வாக்குகள் குவியத் தொடங்கி உள்ளன. இதனால் அவர் டேஞ்ஜர் ஜோனில் இருந்து தப்பித்துவிட்டார்.

44

எஞ்சியுள்ள மூவரில் சாந்திக்கு தான் குறைவான அளவு வாக்குகள் கிடைத்துள்ளன. இதனால் அவர் இந்த வாரம் பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேற அதிக வாய்ப்புகள் உள்ளதாக கூறப்படுகிறது. மறுபுறம் இந்த நிகழ்ச்சி பாப்புலர் ஆவதற்கு முக்கிய காரணமாக இருந்து வரும் ஜிபி முத்து, தனக்கு வீட்டு ஞாபகம் வந்துவிட்டதாகவும், பிள்ளைகளை பார்க்கணும் போல் உள்ளதால் தன்னை வீட்டு அனுப்பிடுமாறு கேட்டு வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படியுங்கள்... AK 61 : நடிகர் அஜித் விரும்பாத செயல்! AK61 படத்தின் அப்டேட் கேட்டு கையில் பிளேடால் எழுதிக்கொண்ட ரசிகர்!

Read more Photos on
click me!

Recommended Stories