எல்லைமீறும் ராபர்ட்.. வைல்டு கார்டு எண்ட்ரியாக பிக்பாஸ் வீட்டுக்குள் செல்ல உள்ளாரா ரச்சிதாவின் கணவர் தினேஷ்?

First Published | Nov 17, 2022, 1:52 PM IST

பிக்பாஸ் வீட்டுக்குள் வைல்டு கார்டு போட்டியாளராக செல்ல வாய்ப்பு இருக்கிறதா என்கிற கேள்விக்கு நடிகை ரச்சிதாவின் கணவர் தினேஷ் விளக்கம் அளித்துள்ளார்.

சரவணன் மீனாட்சி சீரியலில் மீனாட்சியாக நடித்து பேமஸ் ஆனவர் ரச்சிதா. இவர் தினேஷ் என்கிற சீரியல் நடிகரை கடந்த 2015-ம் ஆண்டு காதலித்து திருமணம் செய்துகொண்டார். திருமணத்திற்கு பின்னர் இருவரும் ஜோடியாக சீரியல்களில் நடித்து வந்தனர். இதனிடையே கடந்த ஆண்டு இவர்கள் இருவருக்கும் இடையே சண்டை ஏற்பட்டது.

இதையடுத்து தினேஷை பிரிந்து தனியாக வாழ்ந்து வந்தார் ரச்சிதா. ஒருகட்டத்தில் இருவரும் விவாகரத்து செய்து பிரிந்துவிட்டதாக தகவல் பரவத் தொடங்கியது. ஆனால் அதெல்லாம் வதந்தி என தினேஷ் சமீபத்திய பேட்டி ஒன்றில் தெளிவாக விளக்கம் அளித்துள்ளார். சாதாரணமாக கணவன், மனைவிக்கு இடையே வரும் சண்டை தான் என்று அவர் தெரிவித்துள்ளார்.

தற்போது நடிகை ரச்சிதா, பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்துகொண்டுள்ளார். அதில் சக போட்டியாளரான ராபர்ட் மாஸ்டர், ரச்சிதாவை பார்த்ததும் என்னுடைய கிரஷ் நீங்க தான் என முதல் எபிசோடிலேயே சொல்லிவிட்டார். அதையடுத்து அவர் தொடர்ந்து ரச்சிதாவிற்கு நூல்விட்டு வருவதை பார்த்த ரசிகர்கள் அவரை மீம் போட்டு கலாய்த்து வருகின்றனர்.

ஒரு கட்டத்தில் ராபர்ட்டில் டார்ச்சர் தாங்க முடியாமல் நீங்க எனக்கு அண்ணன் மாதிரி என்று ஓப்பனாகவே சொல்லிவிட்டார் ரச்சிதா. அதன்பின்னர் அவரை விடாமல் பாலோ பண்ணி வரும் ராபர்ட் தற்போது நடைபெற்று வரும் ராஜா ராணி டாஸ்கில் ரச்சிதாவுக்கு ஜோடியாக நடித்து வருகிறார்.

இதையும் படியுங்கள்... வைரலான சர்ச்சை பதிவுகள்... பேஸ்புக்கில் இருந்து விலகிய லவ் டுடே இயக்குனர் - தப்பு பண்ணிவிட்டதாக உருக்கம்

Tap to resize

இதனிடையே சமீபத்திய பேட்டியில் பிக்பாஸ் நிகழ்ச்சியில் ரச்சிதா எப்படி விளையாடுகிறார் என்பது குறித்தும் ராபர்ட் மாஸ்டரின் செயல்பாடுகள் குறித்தும் ரச்சிதாவின் கணவர் தினேஷ் பேசி உள்ளார். அதன்படி ராபர்ட் செய்வதையெல்லாம் பார்க்கும் போது தனக்கு காமெடியாக இருப்பதாக கூறி உள்ள அவர், ரச்சிதா மிகவும் தெளிவாக விளையாடி வருவதாகவும், அவர் இறுதிவரை செல்வார் என்கிற நம்பிக்கை இருப்பதாகவும் கூறினார்.

அதோடு வைல்டு கார்டு போட்டியாளராக செல்ல வாய்ப்பு இருக்கிறதா என்கிற கேள்விக்கு பதிலளித்த தினேஷ், நான் வைல்டு கார்டு போட்டியாளராக சென்றால் அங்கு ஒன்றும் மாறப்போறது இல்லை. அதுமட்டுமின்றி தற்போது இரண்டு சீரியல்களில் நடிக்க கமிட் ஆகி உள்ளதால், பிக்பாஸ் குழுவினர் அழைத்தாலும் வாய்ப்பில்ல ராஜா என்பது தான் என்னுடைய பதிலாக இருக்கும் என கூலாக விளக்கம் அளித்துள்ளார்.

ரச்சிதா பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியே வந்ததும் தாங்கள் இருவரும் இணைய வாய்ப்பு இருப்பதாகவும் அந்த பேட்டியில் அவர் சூசகமாக தெரிவித்திருந்தார். மேலும் அந்த பேட்டி முழுக்க அவர் ரச்சிதாவை ஒரு இடத்தில் கூட விட்டுக்கொடுக்காமல் பேசியதை பார்த்த ரசிகர்கள், இப்படி ஒரு கணவர் கிடைக்க ரச்சிதா கொடுத்து வச்சிருக்கனும் என பாராட்டி வருகின்றனர்.

இதையும் படியுங்கள்... நயன்தாராவின் கியூட்டான குழந்தைகளை பார்க்க லேடி சூப்பர்ஸ்டாரின் வீட்டுக்கு சர்ப்ரைஸ் விசிட் அடித்த பிரபல நடிகை

Latest Videos

click me!