பிக்பாஸில் காதல் மன்னனாக வலம் வரும் போட்டியாளரிடம் ஓப்பனாக காதலை சொன்ன ஷிவின் - இதென்ன புது டுவிஸ்டா இருக்கு

பிக்பாஸ் நிகழ்ச்சியில் காதல் மலர்வது என்பது தொடர்கதையாக இருந்து வரும் நிலையில், தற்போது ஷிவின் தனது காதலை வெளிப்படையாக சொல்லி உள்ளார்.

BiggBoss season 6 contestant Shivin express her love to VJ Kathiravan

பிக்பாஸ் நிகழ்ச்சி கடந்த 2 சீசன்களாக திருநங்கைகளுக்கும் வாய்ப்பு அளிக்கப்படுகிறது. கடந்த சீசனில் திருநங்கை நமீதா மாரிமுத்து போட்டியாளராக கலந்துகொண்டார். இவர் சில நாட்களிலேயே மருத்துவ காரணங்களுக்காக பாதியிலேயே வெளியேறினார். அதேபோல் இந்த சீசனில் பொதுமக்கள் என்கிற அடையாளத்துடன் திருநங்கை ஷிவின் போட்டியாளராக கலந்துகொண்டுள்ளார்.

தற்போதிருக்கும் போட்டியாளர்களில் இறுதிவரை செல்ல வாய்ப்பிருப்பவர் யார் என கேட்டால் அதில் ஷிவின் பெயர் தான் முதலில் இருக்கும், அந்த அளவுக்கு இந்த சீசனில் சிறப்பாக விளையாடி வருகிறார். இவர் கடந்த சில தினங்களுக்கு முன்னர் தனது காதல் குறித்து ரச்சிதாவிடம் உருக்கமாக பேசி இருந்தார். தனது பெற்றோர் சொன்ன ஒரே காரணத்திற்காக காதலை முறித்துக் கொண்டதாக அவர் கூறி இருந்தார்.

இதையும் படியுங்கள்... பிக்பாஸ் வீட்டுக்கு வந்தீங்களா.. இல்ல பிக்னிக் வந்தீங்களா! ராபர்ட் மாஸ்டரை வறுத்தெடுக்கும் ஜனனி- வைரல் புரோமோ


இந்த நிலையில், தற்போது பிக்பாஸ் வீட்டில் தன்னுடன் சக போட்டியாளராக கலந்துகொண்டுள்ள கதிரவன் மீது தனக்கு உள்ள கிரஷ்ஷை அவரிடமே வெளிப்படுத்தி உள்ளார் ஷிவின். இரவில் ஒரு மணிநேரமாக கதிரவனுடன் அமர்ந்து பேசிய ஷிவின், உங்களை எனக்கு ரொம்ப பிடிக்கும் என பலமுறை தனது காதலை சூசகமாக சொல்லியும், தனக்கு அது புரியல என மிக்சர் போல் கதிரவன் அளித்துள்ள பதிலை நெட்டிசன்கள் ட்ரோல் செய்து வருகின்றனர்.

பிக்பாஸ் வீட்டில் கதிரவன் காதல் மன்னனாக வலம் வந்துகொண்டிருக்கிறார். ஏனெனில் முதலில் ஷெரினா கதிரவனுடன் நெருங்கி பழகி வந்தார். அப்போது இருவரும் காதலிப்பதாக பேச்சு அடிபட்டது. இதையடுத்து தீபாவளி சமயத்தில் கதிரவன் தான் தனது கிரஷ் என்று விஜே மகேஷ்வரி ஓப்பனாக சொல்லி இருந்தார். தற்போது அந்த பட்டியலில் ஷிவின் இணைந்திருக்கிறார்.

இதையும் படியுங்கள்... சில ‘நாய்’யால சீக்காளி ஆனேன் - இயக்குனர் ஷங்கரை சீண்டினாரா வடிவேலு?... சர்ச்சையை கிளப்பிய அப்பத்தா பாடல்

Latest Videos

click me!