அய்யோ இவங்களா! பிக்பாஸ் 6ல் வைல்டு கார்டு எண்ட்ரிக்கு தயாராகும் பிரபல விஜே- அப்போ இனி சண்டைக்கு பஞ்சமிருக்காது

First Published | Nov 13, 2022, 1:16 PM IST

பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியில் எண்ட்ரி கொடுக்க உள்ள முதலாவது வைல்டு கார்டு போட்டியாளர் குறித்த தகவல் வெளியாகி உள்ளது.

பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சி கடந்த மாதம் தொடங்கப்பட்டது. 35 நாட்களைக் கடந்து வெற்றிகரமாக ஒளிபரப்பாகி வரும் இந்நிகழ்ச்சியில் தற்போது 17 போட்டியாளர்கள் மட்டுமே உள்ளனர். இதிலும் இன்று விஜே மகேஸ்வரி எலிமினேட் செய்யப்பட உள்ளதால், 16 போட்டியாளர்களே எஞ்சி இருப்பர். பிக்பாஸ் நிகழ்ச்சியில் இடையிடையே வைல்டு கார்டு எண்ட்ரியாக சிலர் வீட்டுக்கும் அனுப்பப்படுவர்.

வைல்டு கார்டு எண்ட்ரியாக பிக்பாஸ் வீட்டுக்குள் செல்லும் போட்டியாளர்களால் நிகழ்ச்சி சூடுபிடிக்கவும் வாய்ப்புள்ளது. ஏனெனில் இவர்கள் வெளியில் இருந்து நிகழ்ச்சியை பார்த்துவிட்டு வந்துள்ளதால் இவர்களுக்கு அது ஒரு கூடுதல் பலமாகவும் இருக்கும். அந்த வகையில் வைல்டு கார்டு எண்ட்ரியாக வந்து இறுதிப்போட்டி வரை முன்னேறிய போட்டியாளர்கள் ஏராளம்.

Tap to resize

அந்த வகையில் பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியிலும் விரைவில் வைல்டு கார்டு எண்ட்ரி இருக்கும் என கூறப்படுகிறது. அந்த வகையில் இந்த சீசனில் முதலாவது வைல்டு கார்டு போட்டியாளராக பிரபல விஜே பார்வது எண்ட்ரி கொடுக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. மதுரையைச் சேர்ந்த பார்வதி, கடந்த ஆண்டு நடிகர் அர்ஜுன் தொகுத்து வழங்கிய சர்வைவர் எனும் நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்துகொண்டார்.

இதையும் படியுங்கள்... நீங்கள் வெற்றிபெற்றது செல்லாது... ஓவராக ஆட்டம்போட்ட தனலட்சுமிக்கு ஒரே அடியாக ஆப்பு வைத்த கமல்ஹாசன்

அந்நிகழ்ச்சியில் இருந்து பார்வதி சீக்கிரமே எலிமினேட் செய்யப்பட்டாலும், அவர் இருந்த சில நாட்கள் அனல் பறந்தது என்றே சொல்லலாம். அந்நிகழ்ச்சியில் இவர் பேசிய பேச்சை பார்த்து, நீங்கள்லாம் பிக்பாஸ் நிகழ்ச்சியில இருக்க வேண்டியவங்க என்று கமெண்ட் செய்தவர்கள் ஏராளம். அந்த அளவுக்கு அதில் போட்டியாளர்களிடம் சண்டை போட்டு இருந்தார் பார்வதி.

இந்நிலையில், அவர் தற்போது பிக்பாஸ் வீட்டுக்கு வைல்டு கார்டு எண்ட்ரியக செல்ல உள்ளதை அறிந்த ரசிகர்கள் அப்போ இனி சண்டைக்கு பஞ்சமே இருக்காது போல என பதிவிட்டு வருகின்றனர். ஒரு சிலரோ இவருக்கும் தனலட்சுமிக்கும் இடையே சண்டை வந்தால் எப்படி இருக்கும் என தற்போதே யூகிக்க தொடங்கிவிட்டனர். 

இதையும் படியுங்கள்...  Biggboss Tamil: தவறாக போன நெட்டிசன்கள் கணிப்பு! இந்த வாரம் பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறியது யார் தெரியுமா?

Latest Videos

click me!