myna nandhini ex husband :பிக் பாஸ் மைனா நந்தினியின் முன்னாள் கணவர் பற்றி தெரியுமா?

First Published | Nov 6, 2022, 1:43 PM IST

இவர்களுக்கு கடந்த 2020 ஆம் ஆண்டு ஆண் குழந்தை பிறந்துள்ளது. அவ்வப்போது தனது குடும்பத்துடன் அவ்வப்போது வீடியோக்களையும் வெளியிட்டு வருகிறார் மைனா. நந்தினி

Myna Nandhini

வெண்ணிலா கபடி குழு மூலம் திரைத்துறைக்கு அறிமுகமாகி இருந்தார் நடிகை நந்தினி. இதைத்தொடர்ந்து விஜய் தொலைக்காட்சியில் பிரபலமாக ஒளிபரப்பாகி வரும் கலக்கப்போவது யாரு என்ற ரியாலிட்டி ஷோவில் பங்கேற்று இருந்தார் நந்தினி.

Myna Nandhini

பின்னர் 2010 ஆம் ஆண்டு இயக்குனர் பாண்டியராஜன் இவரை வம்சம் என்னும் படத்தின் மூலம் மீண்டும் அறிமுகப்படுத்தினார். இந்த படம் இவருக்கு நல்ல அறிமுகத்தை கொடுத்ததென்று சொல்லலாம். மலரு புள்ள என இவரது குரல் இன்றும் பல மீம்ஸ்களில் ஒலித்துக் கொண்டே தான் இருக்கிறது. சரசு என்கிற துணைவேடத்தில் அவர் நடித்திருந்தார்.

மேலும் செய்திகளுக்கு...kamal haasan next : இன்று மாலை வெளியாகும் உலகநாயகன் - எச். வினோத் கூட்டணி குறித்த அப்டேட்?


இந்த விஷயத்தை யோகேஸ்வரன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவித்தார். மேலும் மைனா நந்தினி விதவிதமாக எடுத்து கொண்ட pregnancy போட்டோ ஷூட் புகைப்படங்களும் வைரலாக பார்க்கப்பட்டது.

பின்னர் கேடி பில்லா கில்லாடி ரங்கா, வெள்ளைக்காரத்துரை, ரோமியோ ஜூலியட் போன்ற படங்களிலும் தோன்றியுள்ளார். 2016 ஆம் ஆண்டு விஜய் டிவியின் மிகப் பிரபலமான தொலைக்காட்சி தொடரான சரவணன் மீனாட்சி சீசன் 3-ல் மடோனாவாக நடித்திருந்தார்.

Yokeshwaran myna Nandhini photos

அந்த கதாபாத்திரம் அவருக்கு பாராட்டுகளை பெற்றுக் கொடுத்தது. தொடர்ந்து அமுதா ஒரு ஆச்சரிய குறி, பாண்டியன் ஸ்டோர்ஸ், அரண்மனை கிளி, சின்னத்தம்பி போன்ற தொலைக்காட்சி தொடர்களிலும் இவர் தோன்றியுள்ளார்.

மேலும் செய்திகளுக்கு...childhood actress shruthi : குழந்தை நட்சத்திரம் ஸ்ருதி...இப்ப எப்படி இருக்காங்க தெரியுமா?

Yokeshwaran myna Nandhini photos

2022 ஆம் ஆண்டு நடிகர் கமலஹாசன் நடித்த விக்ரம் படத்தில் விஜய் சேதுபதியின் மூன்று மனைவிகளில் ஒருவராக நடித்து அனைவரது வாழ்த்துக்களையும் பெற்றிருந்தார் மைனா நந்தினி. பின்னர் விருமன் படத்தில் நாயகனின் அண்ணன்களில் ஒருவரின் மனைவியாக நடித்திருந்தார்.

myna nandhini

தொடர்ந்து மீண்டும் கார்த்தி படமான சர்தாரிலும் நடன கலைஞராக வந்து அசத்தியிருந்தார் மைனா நந்தினி. தற்போது இவர் பிக் பாஸ் சீசன் 6 -  21வது போட்டியாளராக வைல்ட் கார்ட் என்ட்ரி மூலம் முதல் வாரத்தில் உள் நுழைந்திருந்தார் மைனா நந்தினி.

Myna Nandhini

இவரை வெளியில் பார்ப்பது போலவே அதே பாவனை உடன் தான் போட்டியிலும் கலந்து கொண்டுள்ளார். இவருக்கு ரசிகர் பட்டாளமும் அதிகரித்துள்ளது. இதற்கிடையே மைனாவின் கணவர் யோகேஷ்,  தனது மனைவியின் பிரமோஷனுக்காக அதிக பணம் செலவழித்ததாக கூறப்பட்டது.

செல்ல சேட்டை

ஆனால் அவர் உண்மை அதுவல்ல என பின்னர் பேசியிருந்த யோகேஷ் புதிதாக வாங்கிய காருக்கு டீவு கட்ட கூட தான் சிரமப்படுவதாகவும், இரண்டு குடும்பங்களை கவனித்துக் கொள்ள வேண்டும். என் வருமானத்தில் குழந்தை கவனிப்பதா? இரண்டு குடும்பத்தை கவனிப்பதா? காருக்கு டீவ் கட்டுவதா? இதில் வேறு பெய்டு ப்ரோமோஷனா என கேட்டிருந்தார்.

myna nandhini

இந்நிலையில் மைனாவின் முன்னாள்வாழ்க்கை குறித்து தகவல் பரவி வருகிறது. அதாவது நந்தினி கடந்த 2017 ஆம் ஆண்டு தனது நீண்ட நாள் காதலரான கார்த்திகேயனை திருமணம் செய்து கொண்டார். ஆனால் திருமணம் ஆகி ஆறே மாதத்தில் இவர்களுக்கு இடையே மனக்கசப்பு ஏற்பட்டது. இதனால் மனம் நொந்த கார்த்தி சென்னையில் உள்ள தனியார் விடுதிகள் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். 

கண்படும் அழகு

தொடர்ந்து 2019 ஆம் ஆண்டு தொலைக்காட்சி நடிகரும் நகைச்சுவை நடிகருமான யோகேஸ்வரன் என்பவரை திருமணம் செய்து கொண்டார் மைனா நந்தினி. இவர்களுக்கு கடந்த 2020 ஆம் ஆண்டு ஆண் குழந்தை பிறந்துள்ளது. அவ்வப்போது தனது குடும்பத்துடன் அவ்வப்போது வீடியோக்களையும் வெளியிட்டு வருகிறார் மைனா. நந்தினி

Latest Videos

click me!