bigg boss tamil 6 : வேலைக்கு பயப்படும் ராம் !தனலட்சுமியின் துடுக்கான பேச்சால் சிறைக்கு சென்ற போட்டியாளர்

Published : Nov 04, 2022, 05:13 PM IST

தனலட்சுமி ராமின் உடல் நிலையை காட்டி வேலையில் இருந்து தப்பிப்பதாக கூறுகிறார். இதனால் கடுப்பாகும் ராம் அவரிடம் சண்டை இடுகிறார். 

PREV
18
bigg boss tamil 6 : வேலைக்கு பயப்படும் ராம் !தனலட்சுமியின் துடுக்கான பேச்சால்  சிறைக்கு சென்ற போட்டியாளர்
bb tamil 6

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் ரியாலிட்டி ஷோக்களில் நல்ல ரேட்டி பெற்று வருகிறது பிக் பாஸ் சீசன் 6. இன்று வார இறுதி நாள் என்பதால் பல டுவிஸ்ட்கள் நடந்தேறி வருகிறது. முன்னதாக 21 போட்டியாளர்களுடன் களமிறங்கிய பிக் பாஸ் சீசன் 6 தற்போது 18 போட்டியாளர்களுடன் நடைபெற்று வருகிறது. 

28
bb tamil 6

இந்த வாரம் அந்த டிவி இந்த டிவி என்னும் டாஸ்க் கொடுக்கப்பட்டது. அதில் டான்ஸ், சமையல், ராசிபலன் என பல்வேறு போட்டிகளும் அறிவிக்கப்பட்டது. அந்த போட்டிகளுக்காக மூன்று பிரிவுகளாக ஹவுஸ் மேட்ஸ் பிரிந்து  தங்களது சிறந்த திறமையை வெளிப்படுத்தி வந்தனர்.

38

ஜனனியின் நடனமும், விக்ரமின் நடிப்பும் பலரையும் ஈர்த்திருந்தது. இதற்கான மார்க்குகளும் வழங்கப்பட்டது. இன்று இதுவரை மூன்று ப்ரோமோக்கள் வெளியாகி உள்ளது. முதல் ப்ரோமோவில் அசிம்,  விக்ரமன், மகேஸ்வரி இடையே ஏற்பட்ட சண்டையும் அடுத்த  ப்ரோமோவில் ஜனனி, குயின்சி இடையிலான சண்டையும் காட்டப்பட்டது. 

48

தற்போது வெளியாகி உள்ள ப்ரோமோவில் அந்த டிவி இந்த டிவி என்னும் டாஸ்க்கில் யார் மோசமாக பர்பாம் செய்தார்கள் என பிக் பாஸ் கேட்கிறார். இதையடுத்து ஒவ்வொரு போட்டியாளராக எழுந்து குறிப்பிடுகிறார். முதலில் அசிம், ஏ டி கே, தனலட்சுமி உள்ளிட்டோர் ஒவ்வொருவராக குறிப்பிடும் காட்சிகள் இடம்பெற்றுள்ளது.

58

இதில் தனலட்சுமியையும், ராமையும் பெரும்பாலானோர் குறிப்பிட்டார்கள். அதில் தனலட்சுமி ராமின் உடல் நிலையை காட்டி வேலையில் இருந்து தப்பிப்பதாக கூறுகிறார். இதனால் கடுப்பாகும் ராம் அவரிடம் சண்டை இடுகிறார். 

68
bigg boss tamil 6

ஆனால் இறுதியில் ராமை சிறைக்கு அனுப்பும் முடிவிற்கு வருகிறார் பிக் பாஸ். இந்த காட்சிகள் தான் தற்போது வெளியாகியுள்ள மூன்றாவது ப்ரோமோவில் இடம் பெற்றுள்ளது. விக்ரமன், ஆயிஷா, அசிம்,  செரினா, கதிரவன் உள்ளிட்டோர் நாமினேட் செய்யப்பட்டுள்ளனர்.

78
bigg boss tamil 6

இவர்களில் யாரெல்லாம் காப்பாற்றப்படுவார்கள் என நாளை கமலஹாசன் தெரிவிப்பார். இதுவரை சாந்தி, அசல் இருவரும் எலிமினேஷன் செய்யப்பட்டுள்ளார்கள். ஜி பி முத்து பாதியிலேயே வெளியில் சென்று விட்டார். 

88

இந்த வாரம் நாமினேட் செய்யப்பட்ட ஆறு நபர்களில் அதிக ஓட்டுடன் விக்ரமன் முதல் இடத்திலும், அசிம் இரண்டாவது இடத்திலும், கதிரவன் மூன்றாவது இடத்திலும், ஆயிஷா நான்காவது இடத்திலும் இருக்கிறார். ஐந்தாவது இடத்தில் ஷெரினா இருப்பதால் இந்த முறை இவர்தான் வெளியேற்றப்படுவார் என தகவல் வெளியாகியுள்ளது.

Read more Photos on
click me!

Recommended Stories