சைலண்டா இருந்து சாதிக்க நினைத்தவருக்கு ஆப்பு ரெடி... பிக்பாஸில் இந்த வாரம் எலிமினேட் ஆகப்போவது யார் தெரியுமா?

பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியில் இந்த வாரம் நாமினேஷனில் அசீம், விக்ரமன், மகேஸ்வரி, ராம், ஆயிஷா, தனலட்சுமி, ஏடிகே ஆகியோரின் பெயர்கள் இடம்பெற்று உள்ளன.

BiggBoss season 6 tamil this week Ram Ramasamy might get evicted

பிக்பாஸ் நிகழ்ச்சி தமிழில் இதுவரை 5 சீசன்கள் முடிந்துள்ளது. தற்போது 6-வது சீசன் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் இந்நிகழ்ச்சி கடந்த மாதம் தொடங்கப்பட்டது. 11 பெண் போட்டியாளர்கள், 9 ஆண் போட்டியாளர்கள், ஒரு திருநங்கை என மொத்தம் 21 போட்டியாளர்களுடன் தொடங்கப்பட்ட இந்நிகழ்ச்சியில் தற்போது 17 போட்டியாளர்கள் மட்டுமே உள்ளனர்.

BiggBoss season 6 tamil this week Ram Ramasamy might get evicted

பிக்பாஸ் நிகழ்ச்சியின் விதிப்படி வாரந்தோறும் ஒருவர் எலிமினேட் செய்யப்படுவது வழக்கம். மக்கள் அளிக்கும் வாக்குகள் அடிப்படையில் இந்த எலிமினேஷன் நடக்கும். அதன்படி முதலில் சாந்தி எலிமினேட் செய்யப்பட்டார். இதையடுத்து இரண்டாவதாக அசல் கோளாறும், கடந்த வாரம் ஷெரினாவும் எலிமினேட் செய்யப்பட்டனர். அதேபோல் ஜிபி முத்து பாதியிலேயே வெளியேறினார்.

இதையும் படியுங்கள்... சினிமா பாணியில் நடந்த கொள்ளை... பிரபல நடிகரின் மனைவியை கட்டிப்போட்டு 250 சவரன் நகையை அபேஸ் பண்ணிய கும்பல்


பிக்பாஸ் நிகழ்ச்சியில் இந்த வாரம் நாமினேஷனில் அசீம், விக்ரமன், மகேஸ்வரி, ராம், ஆயிஷா, தனலட்சுமி, ஏடிகே ஆகியோரின் பெயர்கள் இடம்பெற்று உள்ளன. இதில் அசீம் மற்றும் விக்ரமனுக்கு அதிகளவில் வாக்குகள் பதிவாகி உள்ளன. இதனால் அவர்கள் இந்த வாரம் தப்பித்து விடுவார்கள். அதேபோல் ஏடிகே, ஆயிஷா, தனலட்சுமி, மகேஸ்வரி ஆகியோருக்கும் கணிசமான வாக்குகள் கிடைத்துள்ளன. அவர்களும் சேவ் ஆவதற்கு வாய்ப்பு இருக்கிறது.

இந்த பட்டியலில் கடைசி இடத்தில் உள்ளவர் ராம் தான். அவருக்கு தான் குறைந்த அளவிலான வாக்குகள் கிடைத்துள்ளன. அதனால் இந்த வாரம் ராம் ராமசாமி தான் வெளியேறுவார் என கூறப்படுகிறது. இவர் தான் கடந்த சில வாரங்களுக்கு முன்னர் தன்னை பற்றிய புரமோஷனுக்காக 2.5 லட்சம் ரூபாய் செலவளித்துள்ளதாக கூறி இருந்தார். இதன்மூலம் எப்படியாவது தப்பித்து விடுவோம் என்கிற நினைப்பில் இருக்கும் ராமுக்கு, இந்த வார எலிமினேஷன் சற்று அதிர்ச்சியாக தான் இருக்கும்.

இதையும் படியுங்கள்... நான் எதையும் திருடல.. என்மேல பாலியல் புகார் கொடுப்பேன்னு மிரட்டுறாங்க- பார்வதி நாயர் மீது இளைஞர் சரமாரி புகார்

Latest Videos

click me!