Bigg Boss கொடுத்த புதிய டாஸ்க்கால் வெடிக்கும் சண்டை! லட்சுமி பிரியாவை கதறவிட்ட முனியம்மாள்... செம நோஸ் கட் வாங்கிய முத்தழகி

Published : Oct 06, 2026, 03:56 PM IST

Bigg Boss Tamil Season 10 : பிக் பாஸ் தமிழ் சீசன் 10 நிகழ்ச்சியில் காமன்மேன் ஆக உள்ளே வந்துள்ள முனியம்மாள், டாஸ்கின் போது லட்சுமி பிரியா உடன் சண்டை போட்டுள்ளார்.

PREV
14
பிக் பாஸ் வீட்டில் வெடிக்கும் மோதல்

பிக்பாஸ் தமிழ் சீசன் 10 நிகழ்ச்சி நான்கு வாரங்களை நிறைவு செய்து தற்போது 5-வது வாரத்தில் பரபரப்பாக சென்று கொண்டிருக்கிறது. இந்த வாரத்தின் லீடராக வைல்ட்கார்டு மூலம் வீட்டிற்குள் நுழைந்த அக்‌ஷிதா தேர்வு செய்யப்பட்டுள்ளார். அவர் லீடர் பொறுப்பை ஏற்றுக்கொண்டது முதல் வீட்டில் போட்டியாளர்கள் அணிகளாக பிரிந்து செயல்பட்டு வருவதால், சண்டை மற்றும் கருத்து மோதல்கள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. 5-வது வாரத்தின் முதல் நாளிலேயே போட்டியாளர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்ட நிலையில், அடுத்தடுத்த எபிசோடுகளிலும் பரபரப்புக்கு குறைவில்லாமல் உள்ளது.

TTF vasan vs Jason : அடாவடி செய்த ஜேசன்... அடிதடியில் இறங்கிய டிடிஎஃப் வாசன்! போர்களமாக மாறிய பிக் பாஸ் வீடு

24
பிக் பாஸ் கொடுத்த புது டாஸ்க்

குறிப்பாக வெளியான முதல் புரோமோவில் வீட்டிற்குள் ஒரு பிரச்சனை உருவாவது போன்ற காட்சிகள் இடம்பெற்றிருந்த நிலையில், தற்போது இரண்டாவது புரோமோவும் வெளியாகி எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது. ஒருபுறம் போட்டியாளர்கள் இடையே மோதல்கள் தொடர்ந்தாலும், மறுபுறம் பிக்பாஸ் வீட்டில் டாஸ்க்குகளும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. அந்த வகையில் இன்றைய எபிசோடில் ‘மேஜிக் போஷன்’ என்ற புதிய டாஸ்க் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்தப் போட்டிக்காக வீட்டில் உள்ள போட்டியாளர்கள் மொத்தம் நான்கு அணிகளாக பிரிக்கப்பட்டுள்ளனர்.

34
அதிக புள்ளிகளை பெற போட்டாபோட்டி

அவர்களுக்கு நீலம் மற்றும் சிவப்பு என இரண்டு நிறங்களில் திரவங்கள் வழங்கப்படுகின்றன. அந்த திரவங்களை அடிப்படையாகக் கொண்டே போட்டியின் அடுத்தடுத்த கட்டங்கள் நடைபெறுகின்றன. வெளியாகியுள்ள புரோமோ காட்சிகளை பார்க்கும்போது, நீல நிற திரவத்தை அதிகமாக சேகரிக்கும் அணிக்கு சாதகமான புள்ளிகள் கிடைக்கும் சூழல் இருப்பது தெரிகிறது. அதே நேரத்தில் சிவப்பு நிற திரவத்துடன் தொடர்புடைய அணிகள் எதிர்மறை புள்ளிகளை சந்திக்க வேண்டிய நிலை ஏற்படுவது போல காட்சிகள் அமைந்துள்ளன. இதனால் எந்த அணி அதிக புள்ளிகளை பெற்று முன்னிலை பெறப்போகிறது, யார் நெகட்டிவ் பாயிண்ட்ஸில் சிக்கப்போகிறார்கள் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் உருவாகியுள்ளது.

44
லட்சுமி பிரியா vs முனியம்மாள்

தற்போது வெளியாகி உள்ள மூன்றாவது புரோமோவில் முனியம்மாளை இந்த டாஸ்கின் போது சக பெண் போட்டியாளர்கள் டார்கெட் செய்ய அப்போது லட்சுமி பிரியாவின் டிரெஸ்ஸை பிடித்து இழுக்கிறார் முனியம்மாள். இதனால் டென்ஷன் ஆன லட்சுமி பிரியா, முனியம்மாளை பைத்தியம் என திட்டுகிறார். பின்னர் முனியம்மாளுடன் அவருடைய டீம் மேட்டான முத்தழகி பேசுகிறார். அப்போது அவரிடம் நாம ரெண்டு பேருமே தனியா விளையாடலாம் என முத்தழகி அழைக்க, அதற்கு நோ சொல்லிவிடுகிறார் முனியம்மாள். மேலும், டாஸ்க்கின்போது போட்டியாளர்களுக்குள் கருத்து மோதல்கள் ஏற்படுவதற்கான சூழலும் இருப்பதால், இன்றைய எபிசோடு சண்டை மற்றும் பரபரப்புடன் நகரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Bigg Boss : வைல்டு கார்டில் பிக் பாஸ் வைத்த ட்விஸ்ட்... TTF வாசன் உடன் வீட்டுக்குள் எண்ட்ரியாகும் அந்த 2 பேர் யார்?

Read more Photos on
click me!

Recommended Stories