6-வது சீசனுடன் பிக்பாஸ் நிகழ்ச்சியிலிருந்து விலகும் கமல்ஹாசன்..? வெளியான ஷாக்கிங் தகவல்

First Published | Dec 22, 2022, 10:37 AM IST

தமிழ் பிக்பாஸ் நிகழ்ச்சியின் 6-வது சீசன் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், இந்த சீசன் உடன் பிக்பாஸில் இருந்து கமல்ஹாசன் விலக உள்ளதாக தகவல் பரவி வருகிறது.

தமிழ் சினிமாவில் தலைசிறந்த நடிகர் என்றால் அது கமல்ஹாசன் தான். இவர் பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் தொகுப்பாளராகவும் களமிறங்கினார். கடந்த 2017-ம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்நிகழ்ச்சியில் தொகுப்பாளராக ஆரம்பமான கமலின் பயணம் தற்போது 6 சீசன்களாக தொடர்ந்து வருகிறது. இந்நிகழ்ச்சியை இவரைத் தவிர வேறு யாரும் சிறப்பாக தொகுத்து வழங்க முடியாது என சொல்லும் அளவுக்கு வேறலெவலில் தன் பணியை செய்து வருகிறார் கமல்.

விக்ரம் படம் ரிலீசாகும் முன் நான்கு ஆண்டுகளாக கமல் நடிப்பில் எந்த படமும் ரிலீசாகாமல் இருந்தபோது கூட மக்கள் மத்தியில் இவரை கொண்டு சேர்த்த பெருமை இந்த பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு உண்டு. கடந்த ஜூன் மாதம் கமல் நடிப்பில் வெளியான விக்ரம் திரைப்படம் பிளாக்பஸ்டர் ஹிட் ஆனது. இதையடுத்து கமலுக்கு பட வாய்ப்புகளும் குவிந்து வருகிறது.

இதையும் படியுங்கள்... ஆஸ்கர் இறுதிச்சுற்றுக்கான பரிந்துரை பட்டியல் வெளியீடு... அடுத்த லெவலுக்கு சென்ற RRR பாட்டு & செல்லோ ஷோ படம்

Tap to resize

தற்போது ஷங்கர் இயக்கத்தில் இந்தியன் 2 படத்தில் நடித்து வரும் கமல், அடுத்ததாக மணிரத்னம் இயக்கத்தில் ஒரு படம், எச்.வினோத் இயக்கத்தில் ஒரு படம், வெற்றிமாறன் இயக்கத்தில் ஒரு படம், பா.இரஞ்சித் இயக்கத்தில் ஒரு படம், லோகேஷ் கனகராஜ் உடன் ஒரு படம், மலையாள இயக்குனர் மகேஷ் நாராயணன் உடன் ஒரு படம் என கமலின் கைவசம் ஏராளமான படங்கள் உள்ளன.

இதுதவிர அரசியல் பணிகளும் இருப்பதன் காரணமாக, பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து விலக கமல்ஹாசன் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. தற்போது நடைபெற்று வரும் 6-வது சீசன் தான் கமல் தொகுத்து வழங்கும் கடைசி சீசனாக இருக்கும் என கூறப்படுகிறது. இந்த சீசனின் பைனலில் பிக்பாஸில் இருந்து தான் விலக உள்ள அறிவிப்பை கமல் வெளியிட திட்டமிட்டுள்ளதாகவும் கோலிவுட் வட்டாரத்தில் தகவல் பரவி வருகிறது. 

இதையும் படியுங்கள்... சாகுற நிலைமையில கூட மேக்-அப் போடுவீங்களானு கிண்டலடித்த நடிகை... கடுப்பாகி பதிலடி கொடுத்த நயன்தாரா

Latest Videos

click me!