தமிழ் பிக்பாஸ் நிகழ்ச்சி கடந்த 2017-ம் ஆண்டு தொடங்கப்பட்டது. முதல் சீசனிலேயே மிகப்பெரிய அளவில் மக்கள் மத்தியில் ரீச் ஆன இந்நிகழ்ச்சி, தொடர்ந்து ஆண்டுதோறும் நடத்தப்பட்டு வருகிறது. இதுவரை 5 சீசன்கள் முடிந்துள்ளன. தற்போது 6-வது சீசன் நடத்தப்பட்டு வருகிறது. இந்த ஆறு சீசன்களையும் விறுவிறுப்பு குறையாமல் தொகுத்து வழங்கி வருகிறார் கமல்ஹாசன்.