பாண்டிராஜ் இயக்கிய வம்சம் படம் மூலம் சினிமாவில் நடிகையாக அறிமுகமானவர் நந்தினி. இதையடுத்து கேடி பில்லா கில்லாடி ரங்கா, நம்ம வீட்டு பிள்ளை என சினிமாவில் அவ்வப்போது நடித்து வந்தாலும், இவரை மக்கள் மத்தியில் பாப்புலர் ஆக்கியது சரவணன் மீனாட்சி சீரியல் தான். அதில் மைனா என்கிற கதாபாத்திரத்தில் இவர் நடித்திருந்ததால், ரசிகர்களும் இவரை செல்லமாக மைனா நந்தினி என்றே அழைத்து வருகின்றனர்.