பிக்பாஸில் இந்த வாரம் டபுள் எவிக்‌ஷன்... அதிரடியாக அறிவித்த கமல்ஹாசன் - கலக்கத்தில் ஹவுஸ்மேட்ஸ்

First Published | Dec 5, 2022, 10:56 AM IST

பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியில் முதல் முறையாக இந்த வாரம் டபுள் எவிக்‌ஷன் நடைபெறும் என கமல்ஹாசன் தெரிவித்துள்ளதால் போட்டியாளர்கள் கலக்கம் அடைந்துள்ளனர்.

பிக்பாஸ் நிகழ்ச்சியின் 6-வது சீசன் கடந்த அக்டோபர் மாதம் தொடங்கப்பட்டது. கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் இந்நிகழ்ச்சி 21 போட்டியாளர்களுடன் தொடங்கியது. ஜிபி முத்து இருந்ததால் முதல் இரண்டு வாரம் ஜாலியாக சென்ற இந்நிகழ்ச்சி அவர் வெளியேறியதில் இருந்து சண்டை, சச்சரவுகளுடன் சென்று வருகிறது.

இந்நிகழ்ச்சியில் இருந்து இதுவரை சாந்தி, அசல் கோளார், ஷெரினா, விஜே மகேஸ்வரி, நிவாஷினி, ராபர்ட் மாஸ்டர், குயின்ஸி ஆகியோர் எலிமினேட் செய்யப்பட்டு உள்ளனர். தற்போது 13 போட்டியாளர்களே எஞ்சி உள்ளதால் அவர்களிடையே போட்டியும் கடுமையாகி உள்ளது. தற்போது 57 நாட்களை எட்டி உள்ள இந்நிகழ்ச்சியில் இதுவரை ஒரு வைல்டு கார்டு போட்டியாளர் கூட எண்ட்ரி கொடுக்கவில்லை.

இதையும் படியுங்கள்... ஆண்களுக்கு இலவச பேருந்து டிக்கெட் வழங்கி... மதுரையில் மாஸ் காட்டிய விஜய் ரசிகர்கள்

Tap to resize

இந்த வாரம் வைல்டு கார்டு போட்டியாளர் உள்ளே அனுப்பபடுவார்கள் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், நேற்றைய எபிசோடு இறுதியில் செம்ம டிவிஸ்ட் ஒன்றை கொடுத்துவிட்டு சென்றார் கமல்ஹாசன். அது என்னவென்றால் வரும் வாரம் பிக்பாஸ் வீட்டில் இருந்து இரண்டு பேர் எலிமினேட் செய்யப்படுவார்கள் என அவர் அறிவித்தார்.

கமலின் இந்த அறிவிப்பு போட்டியாளர்கள் மத்தியில் கலக்கத்தை ஏற்படுத்தி உள்ளது. ஏற்கனவே ரச்சிதா மற்றும் தனலட்சுமி ஆகியோர் நாமினேஷன் ஃப்ரீ ஜோனில் உள்ளதால் அவர்கள் இருவரும் எலிமினேட் ஆக வாய்ப்பு இல்லை. எஞ்சியுள்ள 11 போட்டியாளர்களில் இருந்து தான் இரண்டு பேர் இந்த வாரம் எலிமினேட் ஆவார்கள் என தெரிகிறது.

இதையும் படியுங்கள்... ஹரி வைரவன் கடைசியாக அனுப்பிய வாய்ஸ் மெசேஜ்... அவர் குழந்தையின் கல்வி செலவை ஏற்பதாக அறிவித்த விஷ்ணு விஷால்

Latest Videos

click me!