குயினாக வலம் வந்த குயின்ஸிக்கு சம்பளத்தை அள்ளிக்கொடுத்த பிக்பாஸ்... அதுவும் எவ்வளவு தெரியுமா?

First Published | Dec 4, 2022, 5:54 PM IST

கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் 6-வது சீசனில் இந்த வாரம் எலிமினேட் ஆகி உள்ள குயின்ஸியின் சம்பள விவரம் வெளியாகி உள்ளது.

பிக்பாஸ் நிகழ்ச்சி தமிழில் பேமஸ் ஆனதற்கு முக்கிய காரணம் கமல்ஹாசன். அவர் தொகுத்து வழங்கிய விதம் மக்களுக்கு பிடித்துப்போனதால், முதல் சீசனில் இருந்து தற்போது நடைபெற்று வரும் 6-வது சீசன் வரை அவர் தான் தொகுப்பாளராக இருந்து வருகிறார். இந்த 6-வது சீசன் கடந்த அக்டோபர் மாதம் தொடங்கப்பட்டது. 

10 பெண் போட்டியாளர்கள், 9 ஆண் போட்டியாளர்கள், ஒரு திருநங்கை என மொத்தம் 21 போட்டியாளர்களுடன் தொடங்கிய இந்நிகழ்ச்சி தற்போது பாதி கட்டத்தை தாண்டியுள்ளது. அதாவது 50-வது நாளை கடந்துள்ளது. தற்போது பிக்பாஸ் வீட்டில் 14 போட்டியாளர்கள் உள்ளனர். அதிலும் இந்த வாரம் குயின்சி எலிமினேட் ஆகிவிட்டதால் 13 பேர் மட்டுமே எஞ்சி உள்ளனர். 

இதையும் படியுங்கள்... குளு குளு வெண்பனி போல... திருமணத்தில் காதல் கணவருடன் கியூட் போஸ் கொடுத்த ஹன்சிகா

Tap to resize

பிக்பாஸ் வீட்டில் எந்தவித வேலையும் செய்யாமல் ஜாலியாக வலம்வந்துகொண்டிருந்ததே குயின்ஸி எலிமினேட் ஆனதற்கு முக்கிய காரணம். குயின்ஸியின் எவிக்‌ஷன் அவரது ரசிகர்களுக்கு அதிர்ச்சியாக இருந்தாலும், பிக்பாஸ் ரசிகர்களுக்கு சரியானதாகவே தோன்றி இருக்கும். இந்நிலையில் குயின்ஸியின் சம்பள விவரம் வெளியாகி உள்ளது.

பிக்பாஸ் வீட்டில் மொத்தமாக 8 வாரம் தங்கி இருந்துள்ளார் குயின்ஸி. அவருக்கு ஒரு நாளைக்கு ரூ.15 ஆயிரம் முதல் ரூ.20 ஆயிரம் வரை சம்பளமாக வழங்கப்பட்டு உள்ளதாகவும். ஒரு வாரத்திற்கு ரூ.1.4 லட்சம் அளவுக்கு இவர் பெற்றிருக்க கூடும் என்பதால் மொத்தமாக இவர் தங்கிய 8 வாரத்திற்கு ரூ.11 லட்சத்துக்கு மேல் அவர் சம்பளமாக பெற்றிருக்க கூடும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதையும் படியுங்கள்... நான் நடிக்கவே இல்ல.. ஏன் மூஞ்சிய எதுக்கு போஸ்டர்ல போடுற! தாதா படக்குழுவை திருப்பி அடிக்கும் யோகிபாபு

Latest Videos

click me!