பிக்பாஸ் நிகழ்ச்சி, தமிழில் கடந்த 2017-ம் ஆண்டு தொடங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியின் முதல் சீசனே மிகப்பெரிய அளவில் ஹிட் ஆனதால், தொடர்ந்து ஆண்டுதோறும் இந்நிகழ்ச்சி நடத்தப்பட்டு வருகிறது. இதுவரை 5 சீசன்கள் முடிந்துள்ள நிலையில், தற்போது வெற்றிகரமாக ஆறாவது சீசன் நடைபெற்று வருகிறது. இந்நிகழ்ச்சியை முதல் சீசனில் இருந்து கமல்ஹாசன் தான் தொகுத்து வழங்கி வருகிறார்.