இந்தியாவில் பேமஸ் ஆன ரியாலிட்டி ஷோகளில் ஒன்று பிக்பாஸ் நிகழ்ச்சி. தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி, மராத்தி என பல்வேறு மொழிகளில் இந்நிகழ்ச்சி நடத்தப்படுகிறது. இந்தியாவில் முதன்முதலில் இந்தியில் தான் பிக்பாஸ் நிகழ்ச்சி நடத்தப்பட்டது. இந்தி பிக்பாஸ் நிகழ்ச்சி இதுவரை 15 சீசன்கள் முடிந்துள்ளது. தற்போது 16-வது சீசன் நடைபெற்று வருகிறது.