பிக்பாஸில் இந்த வாரம் டபுள் எவிக்‌ஷனா..? அப்போ வெளியேறப்போவது யார்... யார் தெரியுமா?

First Published | Dec 1, 2022, 12:39 PM IST

தமிழ் பிக்பாஸ் நிகழ்ச்சியில் இந்த வாரம் டபுள் எவிக்‌ஷன் நடைபெற வாய்ப்புள்ளதாக சமூக வலைதளங்களில் தகவல் பரவி வ்ருகிறது.

தமிழ் ரியாலிட்டி ஷோக்களில் மிகவும் பேமஸ் ஆனது பிக்பாஸ் நிகழ்ச்சி. இதுவரை 5 சீசன்கள் முடிந்துள்ளது. இதில் முதல் சீசனில் ஆரவ் டைட்டில் வின்னர் ஆனார். அதேபோல் இரண்டாவது சீசனில் ரித்திகாவும், மூன்றாவது சீசனில் முகென் ராவ்வும் டைட்டிலை தட்டித்தூக்கினர். கடைசியாக நடந்து முடிந்த 4 மற்றும் 5-வது சீசனில் ஆரி மற்றும் ராஜூ ஆகியோர் முதலிடம் பிடித்து டைட்டில் வின்னர் ஆகினர்.

தற்போது பிக்பாஸ் நிகழ்ச்சியின் 6-வது சீசன் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. 21 போட்டியாளர்களுடன் தொடங்கிய இந்நிகழ்ச்சியில் தற்போது 14 போட்டியாளர்கள் மட்டுமே உள்ளனர். தற்போது 50 நாட்களைக் கடந்துவிட்டபோதும் போட்டி சுவாரஸ்யம் இல்லாமல் இருப்பதாக கடந்த வாரமே கமல்ஹாசன் போட்டியாளர்களை எச்சரித்து இருந்தார்.

இதையும் படியுங்கள்... விநியாகஸ்தராக விஸ்வரூப வெற்றிகண்ட உதயநிதி..! அடேங்கப்பா... ஒரே வருடத்தில் அவர் சம்பாதித்தது இத்தனை கோடியா?

Tap to resize

இதனால் இந்த வாரம் நடைபெற்ற ஓபன் நாமினேஷில், வீட்டில் எந்தவித வேலையும் செய்யாமல், ஜாலியாக சுற்றிவரும் போட்டியாளர்களை டார்கெட் செய்து, அவர்களை நாமினேட் செய்தனர். அந்த வகையில் இந்த வார நாமினேஷனில் ரச்சிதா, மைனா, குயின்சி, ஜனனி, கதிரவன், தனலட்சுமி ஆகியோரது பெயர்கள் இடம்பெற்றுள்ளன.

இதில் மைனா, குயின்சி மற்றும் கதிரவன் தான் டேஞ்சர் ஜோனில் உள்ளனர். தற்போதைய நிலவரப்படி குயின்சி தான் குறைவான வாக்குகளை பெற்றுள்ளார். அதனால் அவர் இந்த வாரம் எலிமினேட் ஆக அதிகம் வாய்ப்புள்ளது. மறுபுறம் இந்த வாரம் டபுள் எவிக்‌ஷன் நடக்க வாய்ப்பு இருப்பதாகவும் ஒரு தகவல் பரவி வருகிறது. அப்படி நடந்தால் மைனா மற்றும் குயின்சி வெளியேற்றப்படலாம். 

இதையும் படியுங்கள்... 50 வயதில் வாரிசு நடிகருடன் காதல்... திருமணத்துக்கு முன்பே கர்ப்பமானாரா மணிரத்னம் பட நடிகை?

Latest Videos

click me!