பிக்பாஸ் நிகழ்ச்சியின் 6-வது சீசன் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. 60 நாட்களை எட்டியுள்ள இந்நிகழ்ச்சியில் தற்போது 13 போட்டியாளர்கள் உள்ளனர். அதிலும் இந்த வார இறுதியில் டபுள் எவிக்ஷன் நடக்க இருப்பதாக நடிகர் கமல்ஹாசன் அறிவித்துள்ளதால், போட்டியாளர்கள் கலக்கத்தில் உள்ளனர்.
இந்த வார நாமினேஷன் லிஸ்ட்டில் அசீம், ஜனனி, ஏடிகே, ராம், ஆயிஷா, கதிரவன் ஆகிய ஆறு போட்டியாளர்களின் பெயர்கள் உள்ளனர். இவர்களில் இருந்து தான் இரண்டு பேர் எலிமினேட் செய்யப்பட உள்ளனர். இது ஒரு புறம் இருக்க 50 நாட்களை கடந்தும் ஒரு வைல்டு கார்டு போட்டியாளர்க் கூட பிக்பாஸ் வீட்டுக்குள் அனுப்பப்படாதது பலருக்கு வியப்பை ஏற்படுத்தி உள்ளது.
இதையும் படியுங்கள்... கொலை மிரட்டல் புகார்... நடிகை பார்வதி நாயரின் முன்னாள் உதவியாளரை அதிரடியாக கைது செய்தது போலீஸ்