அதேபோல் ஆரம்பத்தில் இவரது நடவடிக்கைகள் ரசிகர்களை மிகவும் கவரும் வகையில் இருந்ததால், ஏராளமானோர் ஜனனியை ஆதரிக்க தொடங்கினர். ஆனால் போகப்போக அமுதவாணனுடன் இவர் கூட்டு சேர்ந்து விளையாடுவது, எப்பொழுதுமே அவருடனே அமுது அமுது என சுற்றுக்கொண்டு இருந்தது சலிப்படைய செய்தது. இதன்காரணமாக கடந்த வாரம் அவர் எலிமினேட் செய்யப்பட்டார்.