பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சி கடந்த வாரம் நிறைவடைந்தது. இந்த சீசனின் இறுதிப்போட்டிக்கு அஸீம், விக்ரமன், ஷிவின் ஆகியோர் தேர்வாகினர். இதில் ஷிவின் மூன்றாம் இடைத்தை பிடிக்க, முதல் இரண்டு இடங்களுக்கு அஸீம், விக்ரமன் இடையே கடும் போட்டி நிலவியது. இதில் விக்ரமன் வெற்றிபெறுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அஸீம் வெற்றியாளராக அறிவிக்கப்பட்டார்.