சின்னத்திரை சீரியல்களில் நாயகனாக நடித்து பிரபலமானவர் அசீம். இவர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் நிகழ்ச்சியின் 6-வது சீசனில் போட்டியாளராக கலந்துகொண்டார். 21 போட்டியாளர்களில் ஒருவராக கடந்த அக்டோபர் மாதம் பிக்பாஸ் வீட்டுக்குள் நுழைந்த அசீம், 106 நாட்கள் பல்வேறு சண்டை, சர்ச்சைகள் என அனைத்தையும் எதிர்கொண்டு வெற்றி கண்டார்.