பிக்பாஸ் வாய்ப்பு
அசீமுக்கு பிக்பாஸ் சீசன் 6-ல் போட்டியாளராக கலந்துகொண்டாலும், அவருக்கு கடந்த சீசனிலேயே வாய்ப்பு கிடைத்தது. 5-வது சீசனில் போட்டியாளராக கலந்துகொள்வதற்காக குவாரண்டைனில் கூட இருந்தார் அசீம். ஆனால் அந்த சமயத்தில் அவரது தாயாருக்கு உடல் நிலை சரியில்லாமல் போனதன் காரணமாக அந்த சீசனில் அவரால் கலந்துகொள்ள முடியாமல் போனது.
5-வது சீசனில் நழுவவிட்ட வாய்ப்பை 6-வது சீசனில் கெட்டியாக பிடித்துக்கொண்டார் அசீம். இந்த முறை போட்டியாளராக கலந்துகொண்ட அவர், ஆரம்பத்தில் விளையாடிய முறை அனைவரையும் முகம் சுழிக்க வைத்தது. யாருக்கும் மதிப்பளிக்காமல், சக போட்டியாளர்களை ஒருமையில் பேசுவது, தரக்குறைவாக பேசுவது, அதிகம் தற்பெருமை பேசுவது என இவர் செய்த செயல்கள் கமல்ஹாசனையே கடுப்பாக்கியது.
இதன் காரணமாக இரண்டு முறை அவருக்கு ரெட் கார்டு கொடுக்கப்பட்ட சம்பவங்களும் இந்த சீசனில் நடந்தன. பின்னர் போகப்போக மற்ற போட்டியாளர்கள் பெரியளவில் சோபிக்காததால், அசீம் சண்டை போடுவதும் நன்றாக தான் உள்ளது என்கிற மனநிலைக்கு மக்கள் வந்துவிட்டார்கள். அதனால் அவருக்கு வாக்களித்து இறுதிப்போட்டி வரை கொண்டு சென்ற அவர்கள், இறுதிப்போட்டியிலும் அவரை ஜெயிக்க வைத்துவிட்டனர்.
இதையும் படியுங்கள்... பிக்பாஸ் டைட்டில் வின்னர் அசீமுக்கு அடித்த ஜாக்பாட்... ரூ.50 லட்சத்துடன் கிடைத்த மற்றுமொரு பிரம்மாண்ட பரிசு