தமிழ் பிக்பாஸ் நிகழ்ச்சியின் 6-வது சீசன் தற்போது நடைபெற்று வருகிறது. 20 நாட்களைக் கடந்து ஒளிபரப்பாகி வரும் இந்நிகழ்ச்சியில், தற்போது 19 போட்டியாளர்களே உள்ளனர். கடந்த வாரம் ஜிபி முத்து பாதியிலேயே வெளியேறினார். அதேபோல் சாந்தி குறைவான வாக்குகளை பெற்றதன் காரணமாக எலிமினேட் செய்யப்பட்டார்.