போர்வைக்குள் கிஸ் அடித்துக்கொண்ட ‘பிக்பாஸ் 6’ போட்டியாளர்கள்... அசல் கோளாரை மிஞ்சிய அந்த இருவர் யார் தெரியுமா?

First Published | Oct 27, 2022, 2:31 PM IST

பிக்பாஸ் 6 போட்டியாளர்கள் இருவர் போர்வையை மூடிக்கொண்டு ஒருவருக்கு ஒருவர் முத்தம் கொடுத்துக் கொண்ட புகைப்படங்கள் வெளியாகி வைரலாகி வருகிறது.

ரோகித் - மரினா ஜோடி

பிக்பாஸ் நிகழ்ச்சி இந்தியாவில் உள்ள பெரும்பாலான மொழிகளில் நடத்தப்படுகிறது. உலகளவில் பிரபலமான இந்நிகழ்ச்சி முதன்முதலில் இந்தியாவில் நடத்தப்பட்டது இந்தி மொழியில் தான். அங்கு சல்மான் கான் தான் இந்நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார். இந்தியில் 15 சீசன்கள் முடிந்துவிட்டன. தற்போது 16-வது சீசன் நடைபெற்று வருகின்றன.

ரோகித் - மரினா ஜோடி

அதேபோல் தெலுங்கு, கன்னடம், மலையாளம், தமிழ் ஆகிய மொழிகளிலும் கடந்த சில ஆண்டுகளாக பிக்பாஸ் நிகழ்ச்சி நடத்தப்பட்டு வருகிறது. இதில் தமிழ் பிக்பாஸ் நிகழ்ச்சியை கமல்ஹாசனும், தெலுங்கு பிக்பாஸ் நிகழ்ச்சியை நாகார்ஜுனாவும், கன்னட பிக்பாஸை சுதீப்பும், மலையாள பிக்பாஸை மோகன்லாலும் தொகுத்து வழங்கி வருகின்றனர்.

இதையும் படியுங்கள்... தளபதி 67 படத்தில் மொத்தம் 4 வில்லன்கள்.. யார் யார் தெரியுமா?

Tap to resize

ரோகித் - மரினா ஜோடி

தற்போது தமிழ் மற்றும் தெலுங்கு பிக்பாஸ் நிகழ்ச்சிகளின் ஆறாவது சீசன் நடைபெற்று வருகிறது. தமிழில் அசல் கோளார் என்கிற போட்டியாளர் தொடர்ந்து பெண் போட்டியாளர்களிடம் சில்மிஷ வேலைகளை செய்து வருகிறார். அவர் குறித்த வீடியோக்கள் தினசரி ஒன்று வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்துகிறது. ஆனால் தற்போது பிக்பாஸ் 6 போட்டியாளர்கள் இருவரும் கிஸ் அடிக்கும் புகைப்படங்கள்வெளியாகி வைரலாகி வருகிறது.

ரோகித் - மரினா ஜோடி

ஆனால் இது நடந்தது தமிழ் பிக்பாஸ் நிகழ்ச்சியில் இல்லை. தெலுங்கு பிக்பாஸ் நிகழ்ச்சியில் தான் இந்த சம்பவம் நடந்துள்ளது. அதில் ரோகித் - மரினா என்கிற ரியல் ஜோடி தான் பிக்பாஸ் வீட்டுக்குள் கிஸ் அடித்து மாட்டி உள்ளனர். முதலில் கன்னத்தில் முத்தம் கொடுத்துக்கொண்ட அந்த ஜோடி, கேமராவில் பதிவாவது தெரிந்ததும் போர்வையை மூடிக்கொண்டு முத்தம் கொடுத்துக் கொண்டனர். என்னதான் அவர்கள் ரியல் ஜோடியாக இருந்தாலும், பல கோடி மக்கள் பார்க்கும் நிகழ்ச்சியில் இப்படி செய்யலாமா என நெட்டிசன்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

இதையும் படியுங்கள்... நேரம் வரும் வரை காத்திருந்தால் சீயான் போல வரலாம்...புகழாரம் சூட்டிய பாக்கியராஜ்

Latest Videos

click me!