டேஞ்சர் ஜோனில் மூன்று பேர்... இந்த வாரம் பிக்பாஸ் வீட்டைவிட்டு வெளியேறப்போவது இவரா?

First Published | Oct 27, 2022, 3:08 PM IST

பிக்பாஸ் 6 நிகழ்ச்சியில் 19 போட்டியாளர்களிடையே கடும் போட்டி நிலவி வரும் நிலையில், இந்த வாரம் எவிக்‌ஷன் பட்டியலில் 7 போட்டியாளர்கள் இடம்பெற்று உள்ளனர்.

தமிழ் பிக்பாஸ் நிகழ்ச்சியின் ஆறாவது சீசன் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. 21 போட்டியாளர்களுடன் தொடங்கிய இந்நிகழ்ச்சியை கமல்ஹாசன் தான் தொகுத்து வழங்கி வருகிறார். முதல் வார முடிவில் யாரும் எலிமினேட் செய்யப்படவில்லை. ஆனால் இரண்டாவது வாரத்தில் இரண்டு பேர் வெளியேறினர்.

அந்த இருவரில் அதிக ரசிகர் பட்டாளத்தை கொண்ட போட்டியாளரான ஜிபி முத்துவும் ஒருவர். இவர் தனது மகனை பார்க்காமல் இருக்க முடியவில்லை எனக்கூறி வெளியேறினார். இதையடுத்து மக்கள் அளித்த வாக்குகளின் அடிப்படையில் குறைவான வாக்குகளைப் பெற்ற சாந்தி, இரண்டாவது வார இறுதியில் எலிமினேட் செய்யப்பட்டார். 

இதையும் படியுங்கள்... போர்வைக்குள் கிஸ் அடித்துக்கொண்ட ‘பிக்பாஸ் 6’ போட்டியாளர்கள்... அசல் கோளாரை மிஞ்சிய அந்த இருவர் யார் தெரியுமா?

Tap to resize

தற்போது 19 போட்டியாளர்களிடையே கடும் போட்டி நிலவி வரும் நிலையில், இந்த வாரம் எவிக்‌ஷன் பட்டியலில் 7 போட்டியாளர்கள் இடம்பெற்று உள்ளனர். இதில் டேஞ்ஜர் ஜோனில் இருப்பது அசல் கோளார், ஆயிஷா மற்றும் அசீம் ஆகிய மூவர் தான். அசல் கோளார் தொடர்ந்து பெண்களிடம் சில்மிஷம் செய்து வருவதால் அவரை வெளியேற்ற வேண்டும் என்கிற முனைப்பில் உள்ளனர்.

மறுபுறம் அசீமுக்கும் குறைந்த அளவிலான வாக்குகளே கிடைத்துள்ளன. அவர் கடந்த வாரம் ரெட் கார்டு வாங்கியபோதும், தொடர்ந்து இந்த வாரமும் போட்டியாளர்களுடன் சண்டையிட்டு வருவது ரசிகர்களுக்கு சலிப்பை ஏற்படுத்தி வருகிறது. அதேபோல் கடந்த வாரம் அவருடன் மல்லுக்கட்டிய ஆயிஷா, இந்த வாரம் அவருக்கு அடிமையாகவே மாறிவிட்டதால் அவரும் டேஞ்சர் ஜோனில் தான் உள்ளார்.

இதன்மூலம் இந்த மூவரில் ஒருவர் தான் இந்த வாரம் வெளியேற உள்ளனர். அதிலும் குறிப்பாக அசல் கோளார் வெளியேற்றப்பட அதிக வாய்ப்புகள் உள்ளதாக கூறப்படுகிறது. 

இதையும் படியுங்கள்... தளபதி 67 படத்தில் மொத்தம் 4 வில்லன்கள்.. யார் யார் தெரியுமா?

Latest Videos

click me!