Bigg Boss 10 : நாமினேஷன் ஃப்ரீ பாஸ் ஜெயிப்பவர்களுக்கு பிக் பாஸ் வைத்துள்ள மெகா ட்விஸ்ட் பற்றி தெரியுமா?

Published : Sep 28, 2026, 11:10 AM IST

Bigg Boss Nomination Free pass : பிக் பாஸ் தமிழ் சீசன் 10 நிகழ்ச்சியில் நாமினேஷன் ஃப்ரீ பாஸ் ஜெயிப்பவர்களுக்கு அந்த பாஸ் 10 வாரங்களுக்கு உதவும் என கூறப்படுகிறது. ஆனால் அதில் ஒரு ட்விஸ்ட் இருக்கிறது.

PREV
14
Bigg Boss Nomination Free pass

பிக் பாஸ் தமிழ் சீசன் 10 நிகழ்ச்சி விறுவிறுப்பே இல்லாமல் சென்றுகொண்டிருந்ததால், அதில் சுவாரஸ்யத்தை கூட்ட பல்வேறு ட்விஸ்டுகளை கொடுத்துள்ளார் விஜய் சேதுபதி. இந்த சீசனில் மிகவும் சர்ச்சைக்குரியதாக இருந்தது லீடர்ஸ் எக்ஸிட் லிஸ்ட் தான். அதன்மூலம் லீடர் தேர்வு செய்யும் மூவரில் இருந்து யாருக்கு உள்ளிருக்கும் போட்டியாளர்கள் அதிக வாக்குகள் செலுத்துகிறார்களோ அந்த போட்டியாளரை உடனடியாக வீட்டை விட்டு வெளியேற்றினர். அதன் மூலம் சாவின்யா, ஜாவித் மற்றும் லட்சுமி ப்ரியா ஆகியோர் எலிமினேட் ஆகி இருந்தனர்.

Bigg Boss 10 : தந்தை மரணம்... பிக் பாஸ் வீட்டில் இருந்து அவசர அவசரமாக வெளியேறிய போட்டியாளர் - ஷாக் ஆன ஹவுஸ்மேட்ஸ்

24
விஜய் சேதுபதி வைத்த ட்விஸ்ட்

நேற்று நடைபெற்ற வீக் எண்ட் எபிசோடில், அந்த மூன்று பேரையும் மேடைக்கு வர வைத்த விஜய் சேதுபதி, அவர்களை மீண்டும் வீட்டுக்குள் அனுப்ப உள்ளதாக அறிவித்தார். அதையடுத்து பிக் பாஸ் வீட்டுக்குள் அவர்கள் மூவரும் மாஸாக எண்ட்ரி கொடுக்க, அது பலருக்கும் உற்சாகமாக இருந்தாலும், ஒரு சிலருக்கு பேரதிர்ச்சியை கொடுத்தது. உள்ளே சென்ற மூவர் கையிலும் ஒரு கயிரை கொடுத்திருந்தார் விஜய் சேதுபதி. அந்த கயிரில் தான் வெளியேற்ற நினைக்கும் போட்டியாளர் ஒருவரை கட்டிக் கொள்ளலாம். இப்படி அந்த மூவரும் தலா ஒரு போட்டியாளரை தேர்வு செய்தனர்.

34
நாமினேஷன் ஃப்ரீ பாஸ் மூவருக்கு

அதன்படி லட்சுமி ப்ரியா, குமரனை தேர்வு செய்தார். சாவின்யா அஸ்மிதாவையும், ஜாவித் தன்யாவையும் தேர்வு செய்திருந்தார். இந்த ஆறு பேரில் மூவர் இந்த வார இறுதியில் எலிமினேட் ஆவார்கள். அதுமட்டுமின்றி நாமினேஷன் ஃப்ரீ பாஸையும் இந்த வாரம் அறிமுகம் செய்தார் விஜய் சேதுபதி. அதுவும் ஒன்றல்ல மூன்று நாமினேஷன் ஃப்ரீ பாஸ். அந்த நாமினேஷன் ஃப்ரீ பாஸை வெல்பவர்கள் 10வது வாரம் வரை எலிமினேட் ஆக மாட்டார்கள் என மொட்டை கட்டையாக அவர் கூறிவிட்டு சென்றார். ஆனால் அதில் ஒரு ட்விஸ்ட் இருக்கிறது.

44
நாமினேஷன் ஃப்ரீ பாஸ் ரூல்ஸ் என்ன?

நாமினேஷன் ஃப்ரீ பாஸ் வைத்திருப்பவர்களை வார வாரம் சக போட்டியாளர்கள் நாமினேட் செய்யலாம். ஒரு வேளை மக்கள் அளிக்கும் வாக்குகள் அடிப்படையில் அந்த நபர் அடுத்த வாரமே எலிமினேட் ஆக வேண்டிய சூழல் வந்தால், அப்போது அவர் தன்னிடம் இருக்கும் நாமினேஷன் ஃப்ரீ பாஸை வைத்து எலிமினேஷனில் இருந்து தப்பிக்கலாம். அத்துடன் அந்த பாஸ்ஸின் பவர் முடிவுக்கு வரும். அதன்பின்னர் அந்த நபர் அடுத்த வாரமும் கம்மியான வாக்குகள் வாங்கி இருந்தால் எலிமினேட் ஆகிவிடுவார். இந்த நாமினேஷன் ஃப்ரீ பாஸை 10வது வாரம் வரை தான் பயன்படுத்த முடியும். அதன்பிறகு அது செல்லுபடி ஆகாது. ஆனால் உள்ளிருக்கும் போட்டியாளர்களே அந்த பாஸ் ஜெயித்தால் 10வது வாரம் வரை நம்மை யாராலும் தொட முடியாது என்கிற மெதப்பில் இருக்கிறார்கள்.

Bigg Boss Lakshmi Priya Salary : 18 நாட்களில் எலிமினேட் ஆன லட்சுமி பிரியா... பிக் பாஸ் வாரிவழங்கிய சம்பளம் இத்தனை லட்சமா?

Read more Photos on
click me!

Recommended Stories