Bigg Boss Tamil Season 10 : பிக் பாஸ் தமிழ் சீசன் 10 நிகழ்ச்சியில் போட்டியாளர் ஒருவரின் தந்தை மரணம் அடைந்ததால் அந்த போட்டியாளர் அவசர அவசரமாக வெளியேற்றப்பட்டு உள்ளார்.
தமிழ் சின்னத்திரையில் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வரும் பிக் பாஸ் தமிழ் சீசன் 10 நிகழ்ச்சி, நாளுக்கு நாள் பரபரப்பான திருப்பங்களுடன் நகர்ந்து வருகிறது. 19 போட்டியாளர்களுடன் தொடங்கிய இந்த சீசனில், அடுத்தடுத்து சிலர் வீட்டை விட்டு வெளியேறியதால் தற்போது போட்டியாளர்களின் எண்ணிக்கை கணிசமாக குறைந்துள்ளது. இதுவரை பிளாக் பாண்டி, சாவின்யா, மணிவண்ணன், ஜாவித் மற்றும் லட்சுமி பிரியா என ஐந்து போட்டியாளர்கள் பிக் பாஸ் வீட்டிலிருந்து வெளியேறியுள்ளனர்.
குறிப்பாக, நேற்று லீடர் எக்சிட் லிஸ்ட் முறையில் லட்சுமி பிரியா வெளியேற்றப்பட்ட சம்பவம் அவருடன் நெருக்கமாக இருந்த போட்டியாளர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதற்கிடையே, இந்த வாரம் எவிக்ஷன் இருக்காது என எதிர்பார்க்கப்பட்ட சூழலில் மற்றொரு பரபரப்பான தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, ஆனந்தி பிக் பாஸ் வீட்டிலிருந்து வெளியேறியுள்ளதாக தகவல்கள் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகின்றன. இந்த வாரத்திற்கான லீடர் எக்சிட் லிஸ்டில் லட்சுமி பிரியா, ஆனந்தி மற்றும் முத்தழகி ஆகிய மூன்று பேர் இடம்பெற்றிருந்தனர்.
34
ஆனந்தி வெளியேறியதன் பின்னணி என்ன?
இதில் ஆனந்தி நூலிழையில் தப்பித்ததாக தகவல் வெளியான நிலையில், தற்போது அவர் நிகழ்ச்சியில் இருந்து விலகியதாக கூறப்படுவது ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆனந்தியின் குடும்பத்தில் ஏற்பட்ட துயர சம்பவமே இதற்கு காரணம் என கூறப்படுகிறது. அவரது தந்தை உயிரிழந்ததை தொடர்ந்து, குடும்ப சூழ்நிலை காரணமாக ஆனந்தி பிக் பாஸ் நிகழ்ச்சியிலிருந்து வெளியேறியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த தகவலை ஆனந்தியே தனது இன்ஸ்டா ஸ்டோரியில் ஷேர் செய்துள்ளார்.
ஆனந்தியின் ரசிகர்களும் இந்த செய்தியை சோகத்துடன் பகிர்ந்து வருகின்றனர். ஆனந்தியும் வெளியேறியதாக கூறப்படும் நிலையில், பிக் பாஸ் தமிழ் சீசன் 10 வீட்டில் தற்போது 15 போட்டியாளர்கள் மட்டுமே இருப்பதாக தெரிகிறது. இதனால் நான்காவது வாரத்தின் தொடக்கத்திலேயே இரண்டு வைல்ட்கார்டு போட்டியாளர்கள் வீட்டிற்குள் களமிறக்கப்படலாம் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. அந்த இரண்டு வைல்ட்கார்டு போட்டியாளர்கள் யார்? அவர்கள் எப்போது பிக் பாஸ் வீட்டிற்குள் வருவார்கள்? என்பது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.